17 ஆவது நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 19 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  உத்தரப்பிரதேசத்தின் மாவ், சந்தாவ்லி, மிர்ஷாபூரிலும், மேற்குவங்க மாநிலத்தின் மதுராபூர், டம் டம் நகர் என, ஒரே நாளில் ஐந்து இடங்களில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம்  மேற்கொண்டார்.

சந்தாவ்லி பிரசார கூட்டத்தில்  பேசிய பிரதமர் மோடி, கொல்கத்தாவில், பாஜக பேரணியின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால், திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டது

மேற்குவங்க மக்களால் கொண்டாடப்படும் தலைவராக விளங்கும் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகவும், அதே இடத்தில், மீண்டும், வித்யாசாகரின் சிலை நிறுவப்படும்.

கடந்த மாதம் வரை, தன்னை அகற்றியே தீருவதுதான் குறிக்கோள் என முழங்கிய கலப்பட கூட்டணியினர், நாளுக்கு நாள், பாஜகவிற்கான ஆதரவு பெருகிவருவதை கண்டு, கலக்கமடைந்துள்ளனர்.

வெறும் 8 இடங்கள், 10 இடங்கள், 20-22 இடங்கள், 35 இடங்களை வைத்திருப்போர் எல்லாம், பிரதமராக துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் மோடி அரசு வேண்டும் என்கிறார்கள்.

தீவிரவாதிகளை கொன்றழித்தவர்கள் யார்?,  தங்களுக்கு யார் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என பிரதமர் மோடி அந்த்க் கூட்டத்தில் பேசினார்.