அந்தம்மா வெளியில வந்தா புருஷனை பார்க்க மாட்டாங்க, கட்சி வேலையைதான் பார்ப்பாங்க: சசிக்கு சீண்டல் முட்டுக்கட்டை போட்துள்ளார் சீனியர் அமைச்சர் ஒருவர். 

என்னதான் தினகரனை எடப்பாடி - பன்னீர் அண்ட்கோ கழுவிக் கழுவி ஊற்றினாலும் கூட சசிகலாவுடன், பழனிசாமியின் அணியினர் சிலர் பழைய விசுவாசத்துடன் தான் பயணிக்கிறார்கள் என்பது வெளிப்படையாய் பேசப்படும் ரகசிய சேதி. 

சசிக்கு பரப்பன சிறையில் பல வகையான வசதி வாய்ப்புகள் வழங்கப்படுவதற்கு வெறும் பணம் கைமாறல் மட்டுமே காரணமல்ல, தமிழக அதிகார மையத்திலிருந்து, கர்நாடக அதிகார மையத்துக்கு தரப்ப்படும் நட்பு ரீதியான அழுத்தங்களும் காரணம்! என்றும் சொல்லப்படுவதுண்டு.
இந்நிலையில், எம்.நடராஜனின் நிலை மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு அது புஸ்வாணமானது. 

சசியின் பரோல் முயற்சியை தடுத்தவர்கள் யார், யார்? என்று அலசி பார்த்ததில் தமிழக அமைச்சரவையின் சீனியர் புள்ளி ஒருவர் டெல்லி வரை லாபி செய்து முட்டுக்கட்டை போட்டுள்ளார் என்கிறார்கள். ‘அந்தம்மா சில மாசங்களுக்கு முன்னாடி இதே காரணத்தை சொல்லி பரோல்ல வந்தாங்க. ஆனா ஒரேயொரு நாள் மட்டும் புருஷனை பார்த்தாங்க.

அப்புறம் இளவரசி பொண்ணு வீட்டுல தங்கி கட்சி வேலை, சொத்து வேலை, பஞ்சாயத்து, பரிகாரமுன்னு பல காரியங்களை பார்த்துட்டு போனாங்க. இப்ப பரோல் கிடைச்சாலும் இதேதான் நடக்கும். தினகரன் ஆரம்பிச்சிருக்கிற புது கட்சியை சென்னைக்கு வந்து நின்னு வாழ்த்திட்டுதான் போகும் அந்தம்மா. ஏன் சார் இப்படி வெளியில விடுறீங்க?’ என்றாராம். ஆனால் கர்நாடக சிறைத்துறை நடவடிக்கைகள் அந்த மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்டது! என்று சொல்லி டெல்லி கைவிரித்துவிட்டதாம். 

உடனே கர்நாடக அதிகார மைய தரப்பிலும் இதே பாட்டை பாடிய அமைச்சர் ‘ஏற்கனவே உங்க மாஜி டி.ஜி.பி. சத்யநாராயணராவ் ‘முதல்வர் சொன்னதால்தான் சசிகலாவுக்கு வசதிகள் தரப்பட்டது’ன்னு சொல்லி சித்தராமையா பெயரை டேமேஜ் பண்ணியிருக்கார். இப்போ நீங்க சசிக்கு பரோல் கொடுத்தால் இன்னும்தான் முதல்வர் பெயர் தேசிய அளவில் கெடும்.’ என்று சீன் போட்டாராம். 
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தே சசிக்கு செக் வைக்கப்பட்டதாம். 
இது சில மணி நேரங்களில் சசி டீமின் காதுகளை வந்தடைய, ‘யார்டா அந்த அமைச்சர்?’ என்று ஏக ஸ்கேனிங்கில் இறங்கியிருக்கிறாராம். 
வெயிட் அண்டு ஸீ!