மாநில நலனுக்கான திட்டங்களை வகுப்பதில் கடந்த 6 மாதங்களாக எந்த செயல்பாடும் திமுக அரசிடம் இல்லை. ஒரு ஆட்சி அமைந்து 6 மாதம் எந்த ஒரு மதிப்பீடும் செய்ய முடியாது.
அண்ணாமலை என்ன அட்வைசரா? சசிகலாவை பாஜக வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். 
நேற்று பேசிய அண்ணாமலை, ‘எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது பேசியதை எல்லாம் இப்போது மறந்துவிட்டது திமுக. திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து பொதுமக்கள் பேசுகின்றனர். மாநில நலனுக்கான திட்டங்களை வகுப்பதில் கடந்த 6 மாதங்களாக எந்த செயல்பாடும் திமுக அரசிடம் இல்லை. ஒரு ஆட்சி அமைந்து 6 மாதம் எந்த ஒரு மதிப்பீடும் செய்ய முடியாது. தமிழகம் அடுத்த 5, 10 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தொலைநோக்குப் பார்வை திமுக அரசிடம் கிடையாது. புதிய திட்டங்களை உருவாக்குவதில் போதுமான அறிவாற்றல் திமுகவுக்கு இல்லை.
இதையும் படியுங்கள்:- அடங்க மறுக்கும் ஒமைக்ரான்.. அதிரடியாக களத்தில் இறங்கும் பிரதமர் மோடி.. நாளை முக்கிய முடிவு.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஒருமித்த முடிவுடன் இருக்கிறோம். அதிமுக வலிமையாக இருக்க வேண்டும். சசிகலா அதிமுகவுக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, பாஜகவின் விருப்பமும் அதுதான். தொண்டர்கள் தங்களுக்கு ஒரு தலைவரை தேர்வு செய்ய முடிவெடுத்தால் அதன்படிதான் நடக்க வேண்டும். சசிகலாவின் சரி, தவறுகள் தொடர்பான எனது தனிப்பட்ட கருத்துகளை நான் தெரிவிக்க முடியாது. 
அதேநேரத்தில் அதிமுகவின் நல்ல தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தின் நலனுக்காக அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் இணைப்பு தொடர்பாக பாஜக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்பதை சொல்ல முடியாது. அதேநேரத்தில் சில தரப்பு இது தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது. பாஜக தனது கொள்கைகளை முன்னிறுத்துகிறது. திமுகவுக்கோ கொள்கைகளே இல்லை. அதிமுகவின் செல்வாக்கை சிதைத்து பாஜக வளர திட்டமிடுவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை’’ என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இதையும் படியுங்கள்:- கூட்டத்தை விரட்டியடித்த போலீசார்... அங்கேயே நின்ற ஏட்டு பலி... அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பிய மக்கள்..!
அதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, ‘’அண்ணாமலை தனது கட்சி வேலையை பார்க்கட்டும். எங்கள் விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவை கட்சியில் சேர்க்குமாறு அறிவுரை கொடுக்க இவர் யார்? இவர் என்ன எங்களிடம் அட்வைசரா? அவரவர் வேலையை அவரவர் பார்க்கட்டும். பா.ஜ.கவில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கிறார்கள். 
அது பற்றி நாங்கள் பேசுகிறோமா? சசிகலாவை வேண்டுமானால் பா.ஜ.கவில் சேர்த்துக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தையும், திமுக ஆட்சிக்காலத்தையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாஜக வலுவாக இருக்க சீமானை சேர்த்துக் கொள்ள வேண்டும் . முதலமைச்சர் வீட்டில் சமையல் நடக்கவில்லை என்றாலும் அதற்கு அதிமுக தான் காரணம் என்கின்றனர்’’ எனத் தெரிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்:- 47 வயதில் செம்ம ஸ்டைலிஷாக பேன்ட் - ஷர்ட்டில் தோன்றி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தேவயானி!
