Asianet News TamilAsianet News Tamil

அடங்க மறுக்கும் ஒமைக்ரான்.. அதிரடியாக களத்தில் இறங்கும் பிரதமர் மோடி.. நாளை முக்கிய முடிவு.

பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒமைக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மாநில அளவில் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறித்து பிரதமர் மோடி விரிவாக விவாதிக்க உள்ளார்

Omicron speedly spreading .. Prime Minister Modi will enter the field in action .. Tomorrow is the main decision.
Author
Chennai, First Published Dec 22, 2021, 1:45 PM IST

நாடு முழுவதும் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். உலக  நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் ஒரு மைக்ரான் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள நிலையில் நாளை பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். 

கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் ஒட்டு மொத்த உலகமும் திண்டாடி வருகிறது. தடுப்பூசி மட்டுமே இந்த வைரஸில் இருந்து காப்பாற்றும் என்ற முனைப்பில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து இதை மக்களுக்கு விநியோகித்து வருகிறது. 

Omicron speedly spreading .. Prime Minister Modi will enter the field in action .. Tomorrow is the main decision.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது, தடுப்பூசிகள் உயிர்காக்கும் நிவாரணியாக இருந்துவருகிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஆனாலும் கொரோனா வைரஸ் என்பதே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனித சமூகத்தில் நீங்க முடியாது அரக்கனாக மாறியுள்ளது. குரலை என்பதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது, அதனுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதேநேரத்தில் கொரோனா வைரஸ் அடிக்கடி பிழவுகளுடன் உருமாறி வருகிறது. கொரோனா என்பது டெல்டா வைரஸ் ஆக உருமாறி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அது முதல் அலையில் இருந்து இரண்டாவது அலையாக உருவெடுத்தது. தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு டெல்டா வகை வைரஸ் அதிக பிறழ்வுகளுடன் உருமாறியுள்ளது. இதுவோ ஒமைக்ரான் வைரஸ் ஆக உள்ளது. இந்த வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டது. இது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் வெகு வேகமாக பரவக்கூடியது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அனைத்து நாடுகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அதன் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 54 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 20 பேருக்கும் கர்நாடகாவில் 19 பேருக்கும் ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உதவி செய்யப்பட்டுள்ளது. 200 பேர் பாதிக்கப்பட்டதில் 77 பேர் அதிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இந்த வைரசால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 

குறிப்பாக இந்தியாவில் தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் ஒமைக்கிறான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில், டெல்டா வைரசை காட்டிலும் ஒமைக்ரான் மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் இன்னும் அதிக தரவு பகுப்பாய்வுகள் தேவைப்படுகிறது. கடுமையான மற்றும் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட அளவுகளில் மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Omicron speedly spreading .. Prime Minister Modi will enter the field in action .. Tomorrow is the main decision.

இந்நிலையில் நாடு முழுதும் ஒமைக்ரான் பரவத் தொடங்கி உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒமைக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில அளவில் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறித்து பிரதமர் மோடி விரிவாக விவாதிக்க உள்ளார்.

தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், சங்கராந்தி என அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் எப்படி நோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios