கொரோனா அபாயம் நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மற்றும் தேவை கருதி அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் தொடக்கத்தில் இருந்து தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், காவல்துறை  அதிகாரிகள், காவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றினார்கள். இதில், 4000 செவிலியர்கள் கொரோனா பரவல் எதிரொலி காரணமாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இவர்களின் பணிக்கலாமானது தற்போது நிறைவடைய உள்ளது. இவர்களின் பணியை அரசு பலமுறை பாராட்டியிருந்த நிலையில் தற்காலிக செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிகப் பணிக்காலம் நிறைவடைய உள்ளது. 

கொரோனா நோய்த் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மருத்துவத் துறைக்கும் மக்களுக்கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என  ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.