2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியுடன் கூடிய ஆட்சியே அமைய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . ஆனால் எந்த கட்சியுடனான கூட்டணி என்பதை தற்போதைக்கு சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.  காஞ்சி காமாட்சி அம்மன்  கோயிலில்பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்  நேற்று சாமி தரிசனம் செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பிரதமர் உட்பட  நாங்கள் நாட்டு மக்களிடம் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிலர் கலவரம் நடக்க வேண்டுமென விரும்புகிறார்கள்.  அதேபோல் 2021 தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசுதான் ஆட்சிக்கு வந்தாக வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம் .  மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார் ,  

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் இருந்து வெளியேற போவதாக அறிவித்துள்ளாரே எனக் கேட்டதற்கு ,  இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் பிரதமர்  அலுவலகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது என்றார்.  அதே நேரத்தில் பாஜக யாருடன் கூட்டணி என்பதை தற்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.