திராவிடர்களின் எழுச்சி நாயகன் பெரியாரை என்றும் மறந்தது இல்லை. அரசியல் வழிகாட்டியான பேரறிஞர் அண்ணாவை தவிர்த்து விட்டு எதையும் சிந்தித்ததில்லை இது தான் கலைஞர் கருணாநிதி. ஆனால், இன்று அவர் உருவாக்கிய பத்திரிக்கையில் வெளியான அவர் கட்டிக்காத்த கட்சியின் விளம்பரத்தில் கருணாநிதி படமே இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது ஹாட் டாபிக்..

கருணாநிதியால் துவக்கப்பட்டு முரசொலி மாறன் மற்றும் செல்வத்தால் நிர்வாகிக்கப்பட்டு வந்த திமுக கட்சி பத்திரிக்கையான முரசொலி தற்போது உதயநிதியின் 100 சதவீதம் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பத்திரிக்கையில் 10.01.2021 அன்று வெளியான திமுக சட்டத்துறை சார்பாக வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில் கருணாநிதி படம் இடம் பெறவில்லை.

இதனை சுட்டிக்காட்டி தற்போது சமூகவலைதளங்களில் சக்கப்போடு போட்டு வரும் விமர்சகர் சவுக்கு சங்கர் கருணாநிதி படம் எங்கே என அதிரடியாக கேட்டுள்ளார். 

சவுக்கர் சங்கர் கேட்ட தொனி ஒருமையில் இருந்தாலும் கூட அந்த கேள்வியில் மிகவும், ஆழமும், அர்த்தமும் உள்ளது என தெரிவிக்கிறார் கருணாநிதி விசுவாசி ஒருவர். 

திமுக என்றாலே மேடை போட்டு பேசி பேசியே வளர்ந்த கட்சி என்பார்கள். அதனை புரிந்துகொண்ட கருணாநிதி திமுக போஸ்டர்களில் பேச்சாற்றல் மிக்க அண்ணா மற்றும் பெரியார் படம் இருப்பதை எப்போதும் உறுதி செய்வார். 

கட்சியினர் அண்ணா, பெரியார் படங்களை அச்சடிக்க தவறி இருந்தால் கருணாநிதியிடம் செம டோஸ் விழுமாம். இது பெரியார், அண்ணா மீதான பற்று என்பது ஒருபுறம் இருக்க, அவர்களது கொள்கையால் ஈர்க்கப்பட்ட தொண்டர்களை தக்க வைத்துக்கொள்ளும் மற்றொரு வியூகமும் ஆகும். 

அப்படி பார்த்தால் தற்போதைய திமுகவில் ஸ்டாலின், உதயநிதியை விட கருணாநிதியுன் தொண்டர்களே அதிகம். கருணாநிதியின் ராஜதந்திரம் பேச்சாற்றல் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் உள்ளவர்களே அதிகம் உள்ளனர். இது தற்போது திமுக தலைமைக்கு புரியவில்லையா அல்லது புரிந்து இவ்வாறான தவறு நிகழ்ந்துள்ளது என்பதே சவுக்கர் சங்கர் கேட்டுள்ள ஒரு வரி கேள்வியின் முழு விளக்கமும் ஆகும். 

 

 

சமீபகாலமாக ஆடு உறவு குட்டி பகை என்ற ரீதியில் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், உதயநிதிக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு;- சவுக்கு சங்கர் விமர்சனத்தை அடுத்து இ-பேப்பரில் சென்று பார்த்த போது கருணாநிதி படம் சேர்க்கப்பட்டுள்ளது.