Asianet News TamilAsianet News Tamil

வீரம் செறிந்த திருமாவின் வீரம் எங்கே போனது.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.

வீரம் செறிந்த திருமாவின் வீரம் எங்கே போனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார், முதலமைச்சர் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்வர் நடத்தும் திடீர் விசிட்களால் பிரயோஜனம் என்ன இருக்கிறது? பென்னாகரத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட போது, மாணவர்களுக்கு தினமும் முறைப்படி  மதிய உணவில் வழங்கவேண்டிய கூட்டு பொரியல் இல்லை என தெரிந்தும், அதைப் பற்றி அவர் எதுவும் கேட்காமல் வணக்கம் கூறி சென்றுவிட்டதாக விமர்சித்தார்

Where did the brave of the heroic gentleman go .. Minister Jayakumar question.
Author
Chennai, First Published Oct 3, 2021, 10:34 AM IST

விடுதலை சிறுத்தைகள் கொடி ஏற்ற தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்காமல், திருமாவளவன் அவர்கள் காவல்துறையை விமர்சிப்பது ஏன் என்றும், வீரம் செறிந்த திருமாவின் வீரம் எங்கே போனது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்கே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கிறதென்றால், திமுக அரசின் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் கூறினார்.

Where did the brave of the heroic gentleman go .. Minister Jayakumar question.

மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் 46-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, கூட்டணியில் இருக்கிற கட்சிக்கே இந்த நிலைமை, முதல்வர் அனுமதித்தால் தான் காவல்துறையினர் அதை அனுமதித்திருக்க முடியும், நிலைமை அப்படி இருக்க, எய்தவன் இருக்க அம்பை குறை சொல்வது போல, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்காமல், காவல்துறையை கருப்பு ஆடு என திருமா விமர்சிப்பது என்ன நியாயம் என்றார். வீரம் செறிந்த திருமாவின் வீரம் எங்கே போனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்,

Where did the brave of the heroic gentleman go .. Minister Jayakumar question.

முதலமைச்சர் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்வர் நடத்தும் திடீர் விசிட்களால் பிரயோஜனம் என்ன இருக்கிறது? பென்னாகரத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட போது, மாணவர்களுக்கு தினமும் முறைப்படி  மதிய உணவில் வழங்கவேண்டிய கூட்டு பொரியல் இல்லை என தெரிந்தும், அதைப் பற்றி அவர் எதுவும் கேட்காமல் வணக்கம் கூறி சென்றுவிட்டதாக விமர்சித்தார். அதாவது மதிய உணவு திட்டத்தின், கொள்கை விளக்க குறிப்பில், சாதம் சாம்பார், ரசம், பொரியல் என உள்ளபோது பொரியல் இல்லாததற்கு யார் காரணம்? அப்படி என்றால் அந்தத் துறை எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்காமல்  கண்டுகொள்ளாமல் போவதன் பெயர்தான் ஆய்வா? ஸ்டாலின் கூட்டணியை பற்றிய கவலைப்படுகிறாரே, தவிர கூட்டு, பொரியல் பற்றி கவலைப்படவில்லை என ஜெயக்குமார் விமர்சித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios