Asianet News TamilAsianet News Tamil

திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலி... இடைத்தேர்தல் நடக்குமா அல்லது கைவிடப்படுமா?

தமிழக சட்டப்பேரவையின் காலம் இன்னும் ஓராண்டுக்கு மேல் இருப்பதால், இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே மாதவாக்கில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டு மே மாதத்தில் ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஜெயலலிதாவுக்கு ராஜினாமா செய்தவுடன், அங்கே உடனடியாக இடைத்தேர்தல் நடைபெற்றது.

When will conduct by election in tamil nadu
Author
Chennai, First Published Feb 28, 2020, 10:15 AM IST

திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.க்கள் மறைந்துள்ள நிலையில், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.When will conduct by election in tamil nadu
திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. சாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் குடியாத்தம் தொகுதி  திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலமனார். திமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்த மறைவால்  தமிழக சட்டப்பேரவையில் இரண்டு இடங்கள் காலியாகி உள்ளன.

When will conduct by election in tamil nadu
கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்தது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் அந்தத் தொகுதியை அதிமுக கைப்பற்றியது. இதனால், திமுகவின் பலம் சட்டப்பேரவையில் 100ஆகக் குறைந்தது. இந்நிலையில் திருவொற்றியூர் கே.கே.பி. சாமி, குடியாத்தம் காத்தவராயன் மறைவால், சட்டப்பேரவையில் திமுகவின் எண்ணிக்கை 98-ஆகக் குறைந்துள்ளது.

When will conduct by election in tamil nadu
திமுக எம்.எல்.ஏ.க்களின் மறைவால், இரு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதும். அதன்பிறகு இரு தொகுதிகளும் அதிகாரப்பூர்வமாக காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும். இதனையத்து தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொள்ளும். இதுதான் நடைமுறை. வழக்கமாக ஓராண்டுக்குக் குறைவாக சட்டப்பேரவையின் காலம் இருந்தால், அங்கே இடைத்தேர்தல் நடத்தாமல் தேர்தல் ஆணையம் தவிர்க்கவும் விதிகள் உள்ளன. ஒரு வேளை இடைத்தேர்தல் நடத்த ஆணையம் விரும்பாதபட்சத்தில், அதுதொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.When will conduct by election in tamil nadu
ஆனால், தமிழக சட்டப்பேரவையின் காலம் இன்னும் ஓராண்டுக்கு மேல் இருப்பதால், இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கும் என்றே தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே மாதவாக்கில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டு மே மாதத்தில் ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஜெயலலிதாவுக்கு ராஜினாமா செய்தவுடன், அங்கே உடனடியாக இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios