இதேபோல், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வேதனே தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டம், பொருட்காட்சி திடல் எதிரே, அரசு உதவிபெறும் டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறைச்சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. 

பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு அந்த பள்ளி நிர்வாகமே காரணம் என தேமுதிக நிறுவனர் தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் கொரோனா காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதுபோன்ற சூழலில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம்.

பள்ளியின் சுவர் எந்த அளவிற்கு உறுதியாக உள்ளது என்பதை கூட ஆய்வு செய்யாமல் பள்ளி நிர்வாகம் எப்படி பள்ளியை திறந்தது? பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் எந்த தவறும் செய்யாத பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் தற்போது பறிபோயுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பராமரிப்பின்றி மூடப்பட்டிருந்த பள்ளிகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்த பின்னரே பள்ளிகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்க வேண்டும் . அவ்வாறு செய்திருந்தால் மூன்று மாணவர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்தியிருக்கலாம். 

உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் பள்ளிகள் திறக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அனைத்து பள்ளி கல்லூரிகளில் தமிழக அரசு ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வேதனே தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டம், பொருட்காட்சி திடல் எதிரே, அரசு உதவிபெறும் டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறைச்சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது.

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து, பள்ளிகள் திறக்கப்பட்டத்தில், சேதமடைந்த பகுதிகளை சுட்டிக்காட்டி ஏற்கெனவே பெற்றோர்களும், மாணவர்களும் புகார் தெரிவித்த நிலையில், பள்ளிக்கூட கட்டமைப்பை முறையாக ஆய்வு செய்யாமல், பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களின் உயிரிழப்பிற்கு காரணமாகியது வருத்தத்திற்குரியது. உயர்ந்த கனவுகளையும், லட்சியங்களையும் நெஞ்சில் சுமந்து, பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய பெற்றோர்கள், மாணவர்களை சடலமாக மீட்ட போது, எத்தகைய உச்சக்கட்ட வேதனை அடைந்திருப்பார்கள் என்பதை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், பள்ளி நிர்வாகமும் உணர்வுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். 

இந்த சூழலுக்கு வருத்தம் தெரிவிப்பதும், விபத்து நேர்ந்த பின்னர் ஆய்வு செய்வதும், இன்று ஒருநாள் பரபரப்பாக குழு அமைப்பதும் என்ற நிலையில் மட்டும் இந்த சூழலை கடந்து செல்ல கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு தரத்தை முழுமையாக ஆய்வு செய்து இனி இதுபோன்ற துயரங்கள் நிகழாதவாறு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த மாணவர்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகியோர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.