Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் கே.என்.நேரு சொன்ன முக்கிய தகவல்..!

மாநகராட்சி விரிவாக்கத்தின் போது மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளில் நீடிப்பார்கள். 

When is the local body election? Important information given by Minister KN Nehru
Author
Trichy, First Published Aug 29, 2021, 6:38 PM IST

திருச்சியில் காவேரி பாலம் வலுவிழந்து உள்ளது. அந்த பாலத்திற்கு அருகிலேயே புதிய காவேரி பாலம் கட்டப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் 100 நாள் சாதனை  விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி திறப்பு விழா இன்று காலை நடந்தது. இதில், நகரப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து கண்காட்சியை  திறந்து வைத்து பார்வையிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  ரூ.54.27 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் திருச்சி மாநகராட்சி பகுதியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 103.425 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் நான்கு இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் இரண்டு இடங்களில் கீழ்நிலை நீர்தேக்க தொட்டியம் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது என்றார். 

When is the local body election? Important information given by Minister KN Nehru

திருச்சியில் சிந்தாமணி-மாம்பழச்சாலை இணைக்கும் காவேரி பாலம் வலுவிழந்து உள்ளது. அந்த பாலத்திற்கு அருகிலேயே ரூ.80 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய காவேரி பாலம் கட்டப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 60 அடி அகலத்தில் திருச்சி நீதிமன்றம் முதல் அல்லித்துறை வரை சாலை விரிவாக்கமும் புதிய சாலைகள் அமைக்கப்படும்.  திருச்சியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் மொத்த மற்றும் சில்லறை மார்கெட் அமைக்கப்படும் .திருச்சியில் செயல்படும் வேறு எந்த சந்தைகளும் இடமாற்றம் செய்யப்படாது.

When is the local body election? Important information given by Minister KN Nehru

மாநகராட்சி விரிவாக்கத்தின் போது மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளில் நீடிப்பார்கள். அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவார்கள். மேலும், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அந்த தேர்தலுக்கான தேதியை ஒரு சில நாள்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios