10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் மாறினால் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்றார். வருகிற 27ம் தேதி நடைபெறும் 12ம் வகுப்பிற்கான மறுதேர்வின் முடிவுகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 

அதேபோல், 11ம் வகுப்பின் தேர்வு முடிவுகளும் இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகும் என்றார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களிடம் கருத்துக் கேட்டபிறகு 1-9ம்  வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும், பேசிய அவர் பிற மாநிலங்களை விட கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக ஐ.சி.எம்.ஆர் பாராட்டு தெரிவித்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.