Asianet News TamilAsianet News Tamil

வாட்ஸ்-அப் காலில் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் திமுக புது எம்.பி..! தலைவரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் வேலை..!

 கடைநிலைத் தொண்டர்களின் செயல்பாடுகள் இப்படி என்றால் நன்கு படித்து வக்கீல் பட்டம் பெற்ற சீனியர் கவுன்சில்களின் செயல்பாடுகளும் அதேபோன்று தான் உள்ளது. 

whats app call dmk wilson threatens
Author
Tamil Nadu, First Published Nov 20, 2019, 1:48 PM IST

வெயில்... மழை...  எனப் பாராது சிலவேளைகளில் உடல்நலம் குன்றி இருந்தாலும் தான் கொண்ட கொள்கைக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் நாள்தோறும் பல ஏச்சுப் பேச்சுக்களை தாங்கிக் கொண்டு 14 மணி நேரம் உழைத்து வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், இளைஞரணி செயலாளர் உதயநிதியும், மேற்கொண்ட கடின உழைப்பால்தான் வேலூர் மக்களவை தொகுதி வெற்றியே சாத்தியமானது. இது அனைவரும் அறிந்த ஒன்று. கட்சி வளர்ச்சி ஒருபுறமிருக்க, ’மேலிடத்து ஆதரவோடு’அசுர பலத்துடன் இயங்கி வரும் எடப்பாடி அரசை எதிர்த்து ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்து கட்டுமானத்தை எழுப்பி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவே அமைந்து வருகிறது அக்கட்சியின் சில முக்கியஸ்தர்களின் செயல்பாடுகள்.whats app call dmk wilson threatens

பிரியாணிக்கடை பிரச்னையில் கடைநிலை தொண்டரின் செயலால் இந்தியாவின் முக்கியக்கட்சியின் தலைவர் என்றும் பாராமல் கட்சிக்காக நேரடியாக சென்று அந்தப் பிரச்னையை சரி செய்தார். கடைநிலைத் தொண்டர்களின் செயல்பாடுகள் இப்படி என்றால் நன்கு படித்து வக்கீல் பட்டம் பெற்ற சீனியர் கவுன்சில்களின் செயல்பாடுகளும் அதேபோன்று தான் உள்ளது. 

கலைஞர் கருணாநிதி சமாதி விவகாரத்தில் சமயோசிதமாக கையாண்டு கட்சிக்கும், தலைமைக்கும் கெளரவத்தை தேடித்தந்த மூத்த வழக்கறிஞரான புது எம்.பி.,யான வில்சனும், கட்சியின் பெயரைக் கெடுக்கும் வேலையில் இறங்கி உள்ளார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்குத் தொடர்பாக அவர் அளித்த பேட்டி சில பத்திரிக்கைகளில் வெளியானது. 

இந்தப்பேட்டி வெளியான சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நபர்களிடம் வாட்ஸ்-அப் காலில் தொடர்பு கொண்ட வில்சன், ‘’நீ சுப்ரீம் கோர்ட்டில் உள்ளே இருந்தாயா..? பிரச்னை வரும்... பார்த்துக் கொள்ளுங்கள்’என லேசாக மிரட்டும் தொனியில் பேசி உள்ளார். இது சில பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் எரிச்சலை கிளப்பி உள்ளது. டீசண்டான மனிதர் என கருதப்படும் வில்சனே இப்படி நடந்து கொண்டால் எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால் தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்தால் பத்திரிக்கையாளர்களின் நிலைமை என்னவாகும் என யூகிக்க முடிகிறது.

whats app call dmk wilson threatens

கடந்த திங்கட்கிழமை தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடந்த விசாரணைக்கு பிறகு வில்சன் செய்தியாளர்களை சந்தித்த போது, ’திமுகதான் தேர்தலை தள்ளி வைக்க வாதம் செய்தது’எனத் தெளிவாக கூறினார். அதாவது, அவரது பேட்டியின் முழுப்பேட்டியின் விவரம் இதோ... (பேட்டி வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது)

வில்சன் பேட்டி:

-

வில்சன் பேட்டியின் எழுத்து வடிவம் இதோ..( ஸ்டோரிக்கு அப்பாற்பட்டது...)


’’உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் என்ன சொன்னோம் என்றால், ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த அப்பீலில் எல்லா மாவட்டங்களிலும் எல்லைகள் பிரிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தை அனைத்து தேர்தலுக்கும் பயன்படுத்த வேண்டும் போன்ற சில கோரிக்கைகள் அடங்கிய மனு நிலுவையில் உள்ளது. அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 

அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மாநிலத் தேர்தல் ஆணையமும் மற்றும் மனுதாரரும் அந்த வழக்கைப்பற்றி நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் மாவட்ட பிரிப்புக்கு பிறகு மறுவரையறை செய்யாமல் நடத்தப்பார்க்கிறார்கள் எனச் சொன்னோம். 

மேலும் ஒன்பது புதுமாவட்டங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த 9 மாவட்டங்களில் மறுவரையறை நடந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தேன். அதன்பிறகு நீதிபதிகள் அதனை ஏற்றுக் கொண்டு, உள்ளாட்சித் தேர்தல், அனைத்து பிரச்னைகளையும் முடிந்த பிறகு அதாவது சட்ட முறைப்படி என்னென்ன தேவைப்படுகிறதோ, அதையெல்லாம் முடித்த பிறகு தேர்தல் நடத்தலாம் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். 

ஆகவே எல்லாவழக்குகளையும் சேர்த்து இந்த வழக்கை 13ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். மாநிலத் தேர்தல் ஆணையம் திமுக தாக்கல் செய்த மனு குறித்து உச்சநீதிமன்றத்தில் எதுவுமே குறிப்பிடவில்லை. 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு எல்லை மறுவரையறை செய்யவில்லை என நாங்கள் சொன்னபிறகு தான் இந்த உத்தரவு வந்திருக்கிறது. 

முதலில் தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ம் தேதிக்கும் அறிவிக்க முடியும் எனக் கூறினார்கள். ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் மறுவரையறை செய்த பிறகே தேர்தல் நடத்த முடியும் எனக் கூறிவிட்டார்கள். நாங்கள் அளித்த மனு 2 நீதிபதிகள் அமர்வு முன் நிலுவையில் இருந்தது. இப்போது நாங்கள் முறையிட்ட பிறகு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு விட்டது. 

இருந்தாலும் 13ம் தேதிக்கு விசாரணைக்கு வரும் எனக் கூறி இருக்கிறார்கள். ஆகையால், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறி இருக்கின்றனர்’’எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.  


விவகாரம் இப்படி இருக்க தான் அளித்த பேட்டியே தவறு என பத்திரிக்கையாளர்களை வாட்ஸ் -அப் காலில் வந்து மிரட்டுவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மாவட்ட எல்லை மறுவரையறை பிரச்னைக்கும் அதிமுக-  திமுக கட்சிகளின் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இதைத்தான் உப்புசப்பில்லாத வாதத்தை திமுக மேற்கொண்டதாக எதிர்கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றனர். 

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தினால்,  மாவட்டங்களை பிரித்த பிறகு ஊராட்சி குழு, ஒன்றிய குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் எவ்வாறு வரும் என்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் சரியாக அவர் விளக்கிக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios