சர்க்கரையை எறும்பு தின்னுச்சு சொன்ன திமுக அரசு; 7 ஆயிரம் டன் நெல் மாயத்திற்கு என்ன சொல்ல போகுதோ? இபிஎஸ் சாடல்!
சர்க்கரையை எறும்பு தின்னுச்சு சொன்ன திமுக அரசு, 7 ஆயிரம் டன் நெல் மாயத்திற்கு என்ன சொல்ல போகுதோ? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
சர்க்கரையை எறும்பு தின்னுச்சு சொன்ன திமுக அரசு, 7 ஆயிரம் டன் நெல் மாயத்திற்கு என்ன சொல்ல போகுதோ? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவுவை தகுதி நீக்கம் செய்யனும்.! திடீர் கோரிக்கை விடுத்த இந்து முன்னனி- என்ன காரணம் தெரியுமா.?
சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7000 டன் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மோடியா? ஸ்டாலினா? ஸ்டிக்கர் சர்ச்சையால் பயன்பாடின்றி துருப்பிக்கும் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள்