Asianet News TamilAsianet News Tamil

திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் 'காலா' வெற்றியா? தோல்வியா? ரஜினியின் விமர்சிப்பவர்களின் லபோதிபோ ரிபோர்ட்...

what the critics think about Rajinikanth starrer Kaala movie
what the critics think about Rajinikanth starrer Kaala movie
Author
First Published Jun 9, 2018, 12:00 PM IST


ரஜினி படம் 'காலா' திரையரங்கிற்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது... அது வெற்றியா? அல்லது தோல்வியா? என்பது குறித்த கவலைகள் எல்லாம் விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளருக்கானது.

what the critics think about Rajinikanth starrer Kaala movie

ஆனால் திரைப்படத்தை எதிர்பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு ஒவ்வொரு படமும் கொண்டாட்டம்தான்.. ரஜினி படங்களின் வரவு இதற்கு முந்தைய படம் வரை  கதை, திரைக்கதை, பொருட்செலவு, படத்தில் ரஜினியின் நடிப்பு, ரசிகர்களின் வரவேற்பு என்கிற திரை விமர்சனத்தோடு நின்றுவிடும். ஆனால் இப்போது (அரசியல் அறிவிப்புக்கு பிறகு) திரைவிமர்சனத்துக்கு பதிலாக படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அரசியலை சார்பு படுத்தி அனைத்து மீடியாக்களும் மிகைப்படுத்தி உளறிக் கொண்டிருக்கிறது.

அதுவும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிற அறிவு ஜீவிகளின் அளப்பரை தாங்கவில்லை. பிஜேபிக்கு எதிராக படக்காட்சிகள் அமைக்கப் பட்டிருப்பதாக ஒரு சிலரும், அவருடைய உண்மையான சொரூபத்திற்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு சிலரும், போராட்டத்திற்கு எதிராக தூத்துக்குடியில் பேசிவிட்டு படத்தில் போராடுவதுதான் வழி என்பது போல, முன்னுக்குப்பின் முரணாக காட்சிகள்

அமைக்கப்பட்டுள்ளதாக, ஒரு சிலரும் விமர்சித்தாலும் கடைசியில் இனி ஒரு போதும் தமிழக அரசியலில் நடிகர்களால் கோலோட்ச முடியாது.
“எம்ஜிஆர்” வேறு ரஜினி வேறு என்றும், அரசியலறிவு சுத்தமாக கிடையாது. ரஜினியின் கருத்துக்கள் எல்லாம் சுத்த பேத்தல் என்பது போன்ற தொடர்ந்த விமர்சனங்களை சில, இவர்களின் கவலை எல்லாம் தங்கள் கடைக்கு வரத்து குறைந்து விடுமே என்கிற கவலைதான்.

what the critics think about Rajinikanth starrer Kaala movie

சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் ஒப்பிட்டு மக்கள் அரசியலை எடுத்துக் கொள்கிற போக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலை உண்மையில் மாறியிருக்கிறது என்கிற கருத்துக்கள் ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால், ரஜினியை சினிமா நடிகனாக ரசிப்பதை விட சிறந்த மனிதனாக அரசியல் மேடைகளிலேயே விமர்சித்தவர்கள்தான் இன்று லபோதிபோ என்று அடித்துக்கொள்கிறவர்கள்.

ரஜினியே சினிமா உலகத்திலிருந்து வரக் கூடிய கடைசி அரசியல்வாதியாக இருந்து விட்டு போகட்டும். அதுவே என் விருப்பமும் கூட, சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரிந்த ஒரே நடிகன் என்று பல அரசியல் மேடை நடிகர்களால் புகழப்பட்ட  ரஜினியின் வரவு.
திரைத்துறையினரால் பாழடிக்கப்பட்ட அரசியல் களத்தை தூய்மைபடுத்தும் திரைத்துறையின் பரிகாரமாக அமைந்துவிட்டு போகட்டும்.

அரசியலில் டாக்டர் வரலாம், இன்ஜினியர் வரலாம், வக்கீல் வரலாம், ஏன் டீ ஆத்துறவன் கூட வரலாம் ஆனா நடிகன் வரக்கூடாதுங்கறது. லாஜிக்கா உங்களுக்கு உதைக்கலையா? திரைத்துறை என்கிற பிரபலத்தன்மைதான் உங்களுக்கு பயம் என்றால் நீங்கள் T. ராஜேந்தர், பாக்யராஜ், சீமான், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் போன்றவர்களின் வரவிற்காக எல்லாம் ஏன் கூவவில்லை.

what the critics think about Rajinikanth starrer Kaala movie

ஏன் என்றால் அவர்களால் உங்களின் வியாபாரத்துக்கு பெரிய இழப்பில்லை. அல்லது அவர்களை தேவையென்றால் வளைத்துக் கொள்ளலாம் என்கிற நிலைப்பாடுதான். ரஜினியின் குணாதியம் தெரிந்ததினால் ஏற்பட்ட தடுமாற்றங்கள்தான் இவ்வளவு விமர்சனங்களுக்கும் காரணம். ரஜினி அரசியலில் கோலோச்ச வரவில்லை. உண்மையான அரசியல்வாதிகள்.

அதாவது அரசியலுக்காக பிறந்தவர்களாய் தங்களை தாங்களே தம்பட்டம் அடித்துக்கொள்கிறவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்க வந்திருக்கிறவர். அரசியல் வியாதிகளாய் இருக்கிறவர்கள் உண்மையான அரசியல்வாதிகளாய் மாறினாலே ரஜினிக்கு கிடைத்த வெற்றிதான்.
நடிகன்.. நடிகன்... என்று புலம்புவதை விடுங்கள். அரசியல் களத்தில் எந்த துறை புண்படுத்தியதோ. அதே துறையை சார்ந்தவரால் பண்படுத்தப்பட போகிறது. "முள்ளை முள்ளால்தான் எடுக்கலாம்" என்கிற பழமொழி அறியாதவர்களா? தமிழக மக்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios