Asianet News TamilAsianet News Tamil

அய்யோ பாவம்.. பலரை எழுந்து நிற்க விடாமல் இறுக்கிப் பிடித்து தடுத்தது எது? கொதிக்கும் தயாநிதி மாறன்.!

தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டால் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருக்கும் சூழலில் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் எழுந்து நிற்காதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

What prevented many RBI officials from getting up? ...DMK MP Dayanidhi Maran
Author
Chennai, First Published Jan 27, 2022, 5:28 AM IST

குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அவர்களில் பலரை எழுந்து நிற்க விடாமல் இறுக்கிப் பிடித்து தடுத்தது எது? என திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது, சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அவர் தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

What prevented many RBI officials from getting up? ...DMK MP Dayanidhi Maran

குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரிசர்வ்  வங்கி அலுவலகத்தில்  குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ரிசர்வ் மண்டல இயக்குனர் தேசியக் கொடியை ஏற்றி மாரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டது. அப்போது அதற்கு வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்து நிற்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் இதுகுறித்து சிலர் கேட்டபோது எழுந்து நிற்கமுடியாது என அவர்கள் கூறினார்கள். தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

What prevented many RBI officials from getting up? ...DMK MP Dayanidhi Maran

தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டால் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருக்கும் சூழலில் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் எழுந்து நிற்காதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

What prevented many RBI officials from getting up? ...DMK MP Dayanidhi Maran

இதுதொடர்பாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அனைவராலும் போற்றப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது தமிழ்நாடே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. ஆனால் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அய்யோ பாவம்.

குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அவர்களில் பலரை எழுந்து நிற்க விடாமல் இறுக்கிப் பிடித்து தடுத்தது எது? மாநில அரசின் அரசாணையை மதிக்க வேண்டும் என்பதுகூட புரியாதபடி தடுமாறியது ஏன்? என தயாநிதிமாறன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios