அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் நடப்பது என்ன..? தெளிவுபடுத்திய அமைச்சர் தங்கமணி
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்வதில் என்ன நடக்கிறது என்பது குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்வதில் குழப்பம் இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.கூட்டத்திற்கு பின் கொரோனா சிறப்பு 2 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’அதிமுக முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து அதிமுகவில் குழப்பம் இல்லை. வரும் 7 ம் தேதி இதற்கான முடிவு தெரிந்து விடும்’’ என அவர் கூறினார்.