Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவுக்கு நடந்தது தான் ஓபிஎஸ்சுக்கு நடக்கும்.. கடம்பூர் ராஜு அதிரடி - அப்போ ஓபிஎஸ் நிலைமை ?

AIADMK : சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி என அதிமுகவின் பலம் குறைந்து வருவதால் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று கோரிக்கை வலுத்துள்ளது.  

What happened to Sasikala will happen to the OPS Said aiadmk Kadambur Raju
Author
First Published Jun 19, 2022, 10:12 PM IST

அதிமுக - ஒற்றை தலைமை

ஆனால் ஒற்றை தலைமை என்பது தேவையில்லாதது என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.   இருப்பினும் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதால் அவர் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.  இதனிடையே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர். வருகிற செயற்குழு பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்தான தீர்மானத்தை இபிஎஸ் தரப்பு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

What happened to Sasikala will happen to the OPS Said aiadmk Kadambur Raju

அதிமுகவின் சீனியர் நிர்வாகி தம்பிதுரை ஓபிஎஸ் இடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடவிருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமை நாற்காலியில் அமரந்துவிடுவது என எடப்பாடி முடிவு செய்திருப்பதால் தற்போது ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

கடம்பூர் ராஜு பேட்டி

முன்னாள் அமைச்சரும்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'அதிமுக என்றுமே ஒற்றை தலைமையில் தான் இருந்து வந்ததுள்ளது  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக அன்று தற்காலிகமாக பொதுக்குழுவில் இரண்டு தலைமையின் கீழ் இயங்கும் என செயல்பட்டு வந்தோம். ஆனால் இன்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க : இரட்டை இலையை முடக்கிவிடுவேன்.. இப்படி மிரட்டாதீங்க ஓபிஎஸ்.! ரகசியத்தை உடைத்த அதிமுக பிரமுகர்

மேலும் தமிழகத்தில் அதிக வாக்கு வங்கியுடன் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒற்றைத்  தலைமையில் தான்  செயல்பட்டு வருகிறது. தலைமை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதனால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும் என பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றனர். ஜனநாயக கருத்து கூறுகிறார். 

What happened to Sasikala will happen to the OPS Said aiadmk Kadambur Raju

சசிகலா

இன்று இங்கு நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும்  கலந்துகொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைவருமே  ஒத்த தலைமையைதான் விரும்புகின்றனர். எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதுதான் இறுதி முடிவு.  அதிமுகவில் முன்னாள் ஜெயலிதா மறைவிற்கு பின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தோம். அதனை பொதுக்குழு தான் ஏற்றுக் கொண்டது, அதில் மாறுபட்ட கருத்து இல்லை. 

பின்னர் அவர் சிறை தண்டனை பெற்றதும், அவர் அந்த பதவியில் நீடிக்க முடியாது என்ற நிலை வரும்போது அதே பொதுக்குழு தான் சசிகலாவை பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் இல்லை என்பதை தீர்மானம் நிறைவேற்றினோம். பின்னர் கால சூழ்நிலை ஏற்று  இரட்டை தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பன்னீர்செல்வம்

இப்போது என்ன பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வருகிறார்களோ அது தான் இறுதியான முடிவு. தீர்மானம் நிறைவேற்றும். எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தற்போது சசிகலா அதிமுக கட்சியில் இல்லை அவரை ஓபிஎஸ் சந்திக்க மாட்டார் என நினைக்கிறோம். அவர் சந்தித்தாலும் அது அதிமுகவை பாதிக்காது’ என்று கூறினார்.கடம்பூர் ராஜுவின் இந்த பேச்சு அதிமுகவின் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமியே என்று தெளிவாக உணர்த்துகிறது.

இதையும் படிங்க : ஒற்றை தலைமை சரியா இருக்கும்.. அதிமுகவுக்கு 'ஐடியா' கொடுத்த திமுக கூட்டணி கட்சி !

Follow Us:
Download App:
  • android
  • ios