AIADMK : வருகிற செயற்குழு பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்தான தீர்மானத்தை இபிஎஸ் தரப்பு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த அதிமுக, அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி அடைந்து இருந்தது. அக்கட்சியின் வாக்கு வங்கியும் கணிசமாகக் குறைந்து இருந்தது. மேலும், அதிமுக முறையான எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை என்ற வாதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில் வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

வருகிற செயற்குழு பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்தான தீர்மானத்தை இபிஎஸ் தரப்பு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் சீனியர் நிர்வாகி தம்பிதுரை ஓபிஎஸ் இடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது தம்பிதுரையிடம் கடந்த 3 ஆண்டுகளாக பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து இருப்பதாக பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதையும் படிங்க : "ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம்.. ஓபிஎஸ் புரிஞ்சுக்கணும்" குண்டை தூக்கி போடும் ஓ.எஸ் மணியன்

இது ஒருபுறமிறக்க 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடவிருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமை நாற்காலியில் அமரந்துவிடுவது என எடப்பாடி முடிவு செய்திருப்பதால் தற்போது ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிறுவனர் ஈஸ்வரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘தமிழக அரசியலில் தற்போது அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தலைவிரித்தாடுகிறது.தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக திறம்பட செயல்பட வேண்டும் என்றால் அக்கட்சிக்கு ஒற்றைத்தலைமை என்பது தான் நல்ல தீர்வாக இருக்கும். தற்போது இருக்கும் இரட்டை தலைமை அந்த கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் தான் உதவும்.

எதிர்க்கட்சியாக மக்களுக்காக குரல் கொடுக்க ஒற்றை திறமை இருந்தால் தான் திறம்பட செயல்பட முடியும். குரல் கொடுக்க முடியும். அதனால் நான் அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது நிரந்தர தீர்வாக அமையும்’ என்று கூறினார். அதிமுக கட்சியின் ஒற்றை தலைமை பிரச்சனைக்கு திமுக கூட்டணி கட்சி ஐடியா கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க : 90 சதவீதம் ஓகே.. நீங்க முரண்டு பிடிக்காதீங்க ஓபிஎஸ்.! எடப்பாடிக்கு ஆதரவாக குதித்த ராஜன் செல்லப்பா