90 சதவீதம் ஓகே.. நீங்க முரண்டு பிடிக்காதீங்க ஓபிஎஸ்.! எடப்பாடிக்கு ஆதரவாக குதித்த ராஜன் செல்லப்பா

AIADMK : அதிமுக இப்பொழுது உள்ள சூழலுக்கு ஒற்றை தலைமை அவசியம் என கட்சியின் நிர்வாகிகளும் , தொண்டர்களும் குரல் எழுப்பியுள்ளனர். 

Panneer Selvam should hand over the AIADMK post to Edappadi Palanisamy said rajan chellappa

அதிமுக - ஒற்றை தலைமை

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி,  உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி என அதிமுகவின் பலம் குறைந்து வருவதால்,  கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று கோரிக்கை வலுத்துள்ளது.  ஆனால் ஒற்றை தலைமை என்பது தேவையில்லாதது என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.   இருப்பினும் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதால் அவர் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.  இதனிடையே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர். 

Panneer Selvam should hand over the AIADMK post to Edappadi Palanisamy said rajan chellappa

சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த தம்பிதுரை, செங்கோட்டையனிடம் ஓபிஎஸ் திட்டவட்டமாக இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா. அப்போது பேசிய அவர், ‘ தற்போது உள்ள விதியின் காரணமாக அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. விதியை மாற்றினால்தான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என அதிமுக தொண்டர்கள் நம்புகிறார்கள். நல்ல தலைமை வர வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஒற்றை தலைமை என்ற விவாதம் எழுந்து உள்ளது. 

இதையும் படிங்க : AIADMK : அதிமுகவில் திருத்தங்கள் செய்ய கூடாது.. நீதிமன்றத்திற்கு பறந்த மனு.. குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் !

இபிஎஸ் Vs ஓபிஎஸ்

அதனால் அதற்கு முடிவு ஏற்பட பொதுக்குழுவில் வாய்ப்புள்ளது. சட்டத்தில் மாறுதல் செய்வது தவறில்லை. சட்ட திருத்தம் செய்வது புதிதல்ல. மாவட்டச் செயலாளர் 90 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை எதிர்பார்க்கின்றனர். நல்ல தலைமையை உருவாக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிளைக் கழகச் செயலாளர், தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறோம். அவர்கள் நல்ல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். 2019 ஆம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் என நான் கூறினேன். தற்போது பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுப்பதை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். 

Panneer Selvam should hand over the AIADMK post to Edappadi Palanisamy said rajan chellappa

அது கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி. ஓ. பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகாரப்பூர்வமான கூட்டம் இல்லை. அதற்கு தனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. ஜானகி பெருந்தன்மையாக விட்டு கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டு கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா தனிக் கட்சி ஆரம்பித்தபோது, சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்திய கட்சியை கட்டிக் காப்பாற்றியவருக்கு மற்றொருவர் தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : "ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம்.. ஓபிஎஸ் புரிஞ்சுக்கணும்" குண்டை தூக்கி போடும் ஓ.எஸ் மணியன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios