இவர் ராஜஸ்தான் பகுதியில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வார்களாம். லடாக் பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக தன்னுடைய அண்ணனிடம் எதுவும் பேச முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

லடாக் கல்வான் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்திய வீரர்களை தாக்கிய சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த தாக்குதலில் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். இவரது தம்பி இதயக்கனி இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ராஜஸ்தான் பகுதியில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வார்களாம். லடாக் பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக தன்னுடைய அண்ணனிடம் எதுவும் பேச முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


இந்திய எல்லை காத்த மாவீரன் பழனியின் உடல் மதுரை விமானநிலையத்திற்கு நேற்று இரவு 11.45 மணிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அதன் பிற்கு அங்கிருந்து இராணுவ வண்டியில் சொந்த ஊரான கடுக்கலூருக்கு பழனியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. பழனியின் முகத்தை பார்த்து கிராம மக்கள் அனைவரும் கதறி அழுத்த காட்சி காண்போரின் இதயத்தை சுக்குநூறாக்கியது. கிராமமே அமைதி காத்து நின்றது சம்பவம் மெய்சிலிர்க்க வைத்தது.