Asianet News TamilAsianet News Tamil

சென்னை, வெளிமாநில விமானங்கள் மேற்கு வங்கத்திற்குள் நுழைய தடை.. மம்தா அரசு போட்ட அதிரடி உத்தரவு..

கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவுவதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

West Bengal Government restriction to flights from other state.. 18 chennai flight canceled.
Author
Chennai, First Published May 6, 2021, 10:44 AM IST

கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவுவதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருவருகிறது. இதையடுத்து மேற்குவங்க அரசு, வெளிமாநிலங்களிலிருந்து தங்கள் மாநிலத்திற்கு வரும் விமான பயணிகள் அனைவரும்,கொரோனா வைரஸ் நெகடீவ் மருத்துவ சான்றிதழ்களுடன் தான் வரவேண்டும்.

West Bengal Government restriction to flights from other state.. 18 chennai flight canceled.

நெகடீவ்  சான்றிதழ்கள் இல்லாத பயணிகளை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கொத்தாவிற்கு தினமும் 9 விமானங்கள் சென்னையிலிருந்து சென்றன. அதைப்போல் அங்கிருந்து தினமும் 9 விமானங்கள் சென்னை வந்துகொண்டிருந்தன. இந்த 18 விமானங்களும் இன்றிலிருந்து மறு அறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரிக்கு செல்லும் 2 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

West Bengal Government restriction to flights from other state.. 18 chennai flight canceled.

சென்னை விமானநிலையத்தில் கொல்கத்தா விமானங்கள் 18 உட்பட இன்று மொத்தம் 96 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் புறப்பாடு விமானங்கள் 48, வருகை விமானங்கள் 48. இதுதவிர இன்று சென்னையிலிருந்து புறப்பாடு விமானங்கள் 48, வருகை விமானங்கள் 52 மொத்தம் 100 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வருகை விமானத்தில் 2,100 பயணிகளும், புறப்பாடு விமானத்தில் 2,800 பயணிகளும் மொத்தம் 4,900 பயணிகள் பயணிக்கின்றனா். என்பது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios