அதிமுக பலவீனமடைவது அதிமுகவிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பலவீனமடைவது அதிமுகவிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் சிங்கள பெளத்த பேரினவாத பாசிஸ்டுகளை சிங்கல மக்களே விரட்டி அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அரை நூற்றாண்டு காலம் இனவாதம், இன வெருப்புதான் அடிப்படை காரணம். ஒரே இனம், கலாச்சாரம், ஒரே தேசம் என அரசியல் ஆதயத்திற்காக இனவெறியை கட்டவிழ்த்து விட்டதுதான் பொருளாதார சரிவிற்கு காரணம்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் அண்ணன் நான்.. சொத்தில் 50 சதவீத பங்கு கொடுக்கணும்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.!

இந்தியாவில் ஒரே தேசம், ஒரே காலச்சாரம், ஒரேமதம், ஒரே மொழி எனும் பாசிச அடிப்படை வாதத்தை சங்பரிவார் அமைப்புகள் வைக்கின்றன. இது இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை இந்தியாவிலும் ஏற்படுத்தும். அதிமுக தலைமை குறித்து அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும், அதிமுக பலவீனப்படுவது, அதிமுகவுக்கு மட்டுமில்லை தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் அதிமுகவின் பலவீனத்தை சங்பரிவார்கள் தங்களை வலிமைபடுத்தி கொள்ள பயன்படுத்துவார்கள். தமிழ்நாட்டில் சங்கபரிவார் வலிமை பெறுவது பெரும் தீங்கை விளைவிக்கும்.
இதையும் படிங்க: ஒபிஎஸ் சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் இபிஎஸ்.. முக்கிய பிரமுகர்கள் திடீர் ஆதரவு.. உயரும் எண்ணிக்கை.!

அமித்ஷா அண்மையில் கூறியிருக்கிறார் அடுத்த இலக்கு தென்னிந்திய மாநிலங்கள் தான் என சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டை மனதில் வைத்து தான் பேசியிருக்கிறார். இத்தனை ஆண்டுகாலம் அவர்கள் தமிழகத்தில் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை, சாதியின் பெயரால் பிளவுபடுத்துகிறார்கள், மதத்தின் பெயரால் பதவியை வளர்க்கிறார்கள், வட இந்திய மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டவை, இப்போது தென்னிந்திய மாநிலங்களில் குறிவைத்து காய்களை நகர்த்துகிறார்கள். அதிமுக பலவீனப்படுவது அதிமுகவிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக தலைவர்களுக்காக சொல்லவில்லை, தொண்டர்களுக்காக சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
