பாஜகவிடம் இருந்து விலகுவதற்கான தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

அப்போது அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில்;- பாஜகவிடம் இருந்து எந்த நேரத்தில் தனியாக பிரிந்து செல்லலாம் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம். நீங்கள் எம்எல்ஏ தேர்தலில் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை. 

இதையும் படிங்க;-  நேபாள ரிசார்ட்டில் பயங்கரம்... கேரளாவை சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் மர்ம மரணம்..!

மேலும், பேசிய அமைச்சர் முதல்வர் எடப்பாடி எந்த வேலையையும் சரியாக செய்ய சொல்லியுள்ளார். அதிமுக தான் மக்களின் அரசு. நாங்கள் சாதாரண மனிதர்கள். நீங்கள் எங்களை எப்போதும் வேண்டுமானாலும் அணுகலாம். சீங்கள் எம்எல்ஏவையும், என்னையும் சட்டையை பிடித்து கேட்கலாம். பிரச்சாரத்ாின் போது வாக்குறுதி அளித்தது போல செய்தது தரவில்லையே என்று கேட்லாம் என்றார். 

இதையும் படிங்க;-  உல்லாசத்துக்காக காலையில் ஒருவர், மாலையில் மற்றொருவர்... ஷிப்ட் முறையில் கள்ளக்காதல்.. இடையூறாக இருந்த குழந்தைக்கு மது ஊட்டிய அட்டூழிய தாய்..!

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள், அமைச்சர்கள் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில் அமைச்சர் இப்படி கூறியுள்ளது பாஜக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்தது. இதனையடுத்து, இந்த பேச்சுக்கு தலைமையில் இருந்து வந்த கடும் எதிர்ப்பை அடுத்து பாஜக உடனான எங்களது கூட்டணியை பிரிக்க முடியாது அமைச்சர் பாஸ்கரன் அந்தர் பல்டி அடித்துள்ளார்.