கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 மாத பெண் குழந்தைக்கு, பெற்ற தாயே மதுவை கொடுத்து கடுமையாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியை சேர்ந்த நந்தினி, கணவர் மாதேஷ் என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 வயது குழந்தையுடன் நந்தினி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் இருக்கும் போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நந்தினியின் கள்ளக்காதலன் சந்தோஷ் பணிக்கு சென்ற நிலையில், மற்றொரு கள்ளக்காதலானுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதை தலைக்கேறிய நிலையில், உல்லாசத்தின் போது குழந்தை நயனாஸ்ரீ தொடர்ந்து அழுது தொந்தரவு செய்துள்ளார். இதனால், கடுப்பான இருவரும் மகள் நயனாஸ்ரீ மீதான ஆத்திரத்தில், மகளுக்கு தானே மதுவை ஊற்றி கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து, கண்மூடித்தனமாக அடித்து கொடுமை படுத்தியுள்ளார். 

இதையும் படிங்க;- 35 சிறுமிகள் துன்புறுத்தி பாலியல் பலாத்காரம்... முன்னாள் எம்.எல்.ஏ. உட்பட 19 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

இதனையடுத்து, குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது தரையில் சுருண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்த போது, ரத்த வாந்தி எடுத்ததால் மேல்சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் நயனாஸ்ரீ, மிகுந்த வலிகளுடன் அம்மா, அம்மாவென்று முணகிகொண்டிருந்தது, மருத்துவர்களை மட்டுமல்லாது பொதுமக்களின் கண்களையும் கண்ணீர் வரவழைத்தது. 

இதுதொடர்பாக போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தாய் நந்தினி மற்றும் 2-வது கள்ளக்காதலன் தப்பி ஓடி தலைமறைவாக இருந்தனர். இதனையடுத்து, நந்தினி தனது முதல் கள்ளக்காதலுடன் மருத்துவமனைக்கே வந்து குழந்தையின் நிலைமையை அறியாமல், போதையில் தள்ளாடியப்படி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். பெற்ற குழந்தைக்கு தாய் மதுகொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.