வாக்குறுதி தந்ததோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் பொருட்டு நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்த மத்திய அரசுக்கு குறிப்பாக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் சார்பில் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோ
பூர்வகுடி விவசாய சமூகமாக இருந்த வேளாளர் சமூகத்தின் மிக நீண்ட ஆண்டு கால கோரிக்கை தங்களது குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான் வாதிரியான் என்ற ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒற்றைப் பெயரில் அழைக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதாகும். தேவேந்திரகுல வேளாளர்களின் ஞாயமான இந்த கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்து அது தொடர்பாக மிகச் சரியான மானுடவியல் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி திரு ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
எத்தனையோ நியாயமற்ற சிறு எதிர்ப்புகளை புறம்தள்ளி தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து நான் சந்திக்க நேரம் கேட்ட பொழுதெல்லாம் மறுக்காமல் அனுமதி தந்து, பல்வேறு சூழலில் என்னை நேரில் அழைத்து தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் அரசாணை கோரிக்கை தொடர்பாக விவாதித்து, ஆறு பிரிவுகள் அல்ல ஏழு பிரிவுகள் என்று நாம் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் வாதிரியார் உள்ளிட்ட 7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டுமென்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு. க. பழனிச்சாமி அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த கோரிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் நடந்தபோது தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கை நியாயமானது என்று வாதிட்டு கோரிக்கை நிறைவேற காரணமாக மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் வாதிட்டு துணை நின்றதாக செய்திகள் வழியாக அறிந்தோம். அந்த வகையில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம், எல்லாவற்றிற்கும் மேலாக தேவேந்திர குல வேளாளர் மக்களின் இக்கோரிக்கை நிறைவேற்றப்பட தேவேந்திர குல வேளாளர் அரசாணை கோரிக்கை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அது நிறைவேற்றப்படும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் சென்னையில் நடந்த அரசு விழாவில் அறிவிப்பு செய்தார். அதோடு மட்டுமல்ல கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் பெருமைகளை, பண்பாடு கலாச்சாரம் குறித்து மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் எது குறித்துப் பேசியது தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை தொடர்பாக புதுடில்லி சென்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தபோது கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் அரசாணை கோரிக்கை குறித்து முழு புரிதலோடு தான் இருப்பதாக எங்களிடம் தெரிவித்திருந்தார் தற்போது சென்னையில் நடந்த நிகழ்வில் மேடையில் உரையாற்றும்போது தெரியப்படுத்தி இருப்பது மூலம் அவர் இந்த கோரிக்கை மீதும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பு மதிப்பு வெளிப்படுகிறது என்பதை எங்களால் உணர முடிந்தது. வாக்குறுதி தந்ததோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் பொருட்டு நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்த மத்திய அரசுக்கு குறிப்பாக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் சார்பில் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மாண்புமிகு மத்திய சமூக நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு அமித்ஷா ஜி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் ஜேபி. நட்டாஜி அவர்களுக்கும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக பதவி வகித்த போதும் தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்பும் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரிக்கை நியாயமானது அதனை நிறைவேற்றித் தரவேண்டும் என்ற பெரும் முனைப்போடு மிகப் பெரிய பாலமாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையே செயல்பட்டு என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து இந்த நீண்டகால கோரிக்கை நிறைவேற காரணமாக இருந்த மதிப்புமிகு தமிழக பாஜக தலைவர் மதிப்புமிகு சகோதரர் திரு எல்.முருகன் அவர்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரிக்கைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும், மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரிக்கை நிறைவேற ஆதரவளித்த பல்வேறு சமூக அமைப்புகளுக்கும், கடந்த 461 நாட்களாக என்னுடைய வேண்டுகோளை ஏற்று தினந்தோறும் கருப்புச்சட்டை அணிந்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியோடு நெறி பிறழாமல் அறவழியில் போராடிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகளுக்கும், இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நமது பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் அறிவிப்பு செய்தது போல தேவேந்திரகுல வேளாளர் அரசாணை தொடர்பான சட்ட திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்ட வடிவம் பெற்று மத்திய மாநில அரசுகளின் அரசிதழில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடப்படும் என்ற நம்பிக்கையோடு தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை வரவேற்க காத்திருக்கிறோம். வரலாற்று சிறப்புமிக்க இக் கோரிக்கை வெற்றி பெற ஆதரவாக நின்ற ஊடகங்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம். நன்றி நன்றி நன்றி!!! இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
