பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் விலைஅதிகரித்துள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளிவிவரங்கள்படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ ரூ.80 ஆகவும், மும்பையில் ரூ.70 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.50 ஆகவும், சென்னையில் ரூ.50 முதல் ரூ.60 ஆகவும் விற்கப்படுகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
 
இதுகுறித்து  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘ எங்கெல்லாம் வெங்காயம் கொள்முதல் செய்ய முடியுமோ அங்கு கொள்முதல் செய்து வருகிறோம். வெங்காயம் எவ்வளவு விலை வேண்டுமானாலும் அதிகரிக்கட்டும். இன்னும் 10 நாட்களில் வெங்காயத்தை நாங்கள் கிலோ 24க்ககு மக்களின் வீடுகளில் அளிக்கிறோம். நியாய விலைக் கடைகள் மூலம் மொபைல் நியாயவிலைக்கடைகள் மூலம் அளிக்கிறோம். 
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்