we will be win in 18 Constituency like RK Nagar

தகுதி நீக்க தீர்ப்புக்குப்பின், தனது வீட்டில் தீப் டிஸ்கஷனில் இறங்கியுள்ள தினா, தனது வீட்டுக்கு எம்.எல்.ஏ.க்கள் சிலரை வரவழைத்துப் பேசினார். இந்த டிஸ்கஷனில் ஆண்டிபட்டி தங்கம், மானாமதுர மாரி என சிலர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது பேசிய தினா, ‘காலத்தைக் கடத்துவதற்காகத்தான் இப்படி ஒரு தீர்ப்பை திட்டம் போட்டு சொல்ல வைத்திருக்கிறார்கள். அவங்க ப்ளான்படி எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துக்கு இதை இழுத்துடலாம் என்று கணக்குப் போடுறாங்க. இவங்களோட முடியடிக்க நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அவங்க இனி என்ன உங்களை தகுதி நீக்கம் செய்வது? நீங்களே ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களாக ரிசைன் லெட்டர் கொடுத்துவிட்டால் என்ன? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என நீங்கள் கடிதம் கொடுத்தால் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் அவர்களுக்கு வேறு வழியே இல்லை.

அப்படி தேர்தல் நடத்தினால், அந்தத் தேர்தலில் எப்படி ஜெயிக்கிறதுன்னு எனக்கு தெரியும். 18 தொகுதியிலும் அதே வேட்பாளர்கள் போட்டியிடுங்க. செலவுகளை நானே பார்த்துக்குறேன். ஒரு தொகுதியில்கூட அதிமுக டெபாசிட் வாங்காது. வாங்க விடக் கூடாது...’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு மானாமதுரை மாரி, ‘நீங்க சொல்றது நல்லாதான் இருக்கு. திரும்பவும் அதிமுக வேண்டுமானால் ஜெயிக்காமல் இருக்கலாம். ஆனால், திமுக ஜெயிக்காது என்பதை எப்படி சொல்ல முடியும்? 18 சீட்டையும் அவங்க பிடிச்சுட்டாங்கன்னா என்ன பண்றது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு தினா, ‘தேர்தல் என்று வந்தால் போட்டி இல்லாமல் இருக்காது. எல்லாத் தடைகளையும் தாண்டி ஆர்.கே.நகரில் எப்படி ஜெயித்தோம். ஒவ்வொரு தொகுதியையும் ஆர்.கே.நகராக நினைப்போம். நான் சொல்ற மாதிரியே எல்லாம் நடந்தா ஒரு தொகுதி கூட மிஸ் ஆகாது, ஜெயிப்போம். நீங்க நம்பிக்கை வைப்பதுதான் முக்கியம்...’ என உசுப்பேத்தி விட்டாராம் தினா.

குறுக்கிட்டு பேசிய ஆண்டிபட்டி தங்கம், ‘ அண்ணன் சொல்றது நல்ல ப்ளான் தான், அண்ணன் என்ன சொன்னாலும் எனக்கு ஓகே தான். என் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியலைன்னு எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கு. இப்போ நான் ராஜினாமா செய்தால், அதுவே எங்க தொகுதி மக்களுக்கு என் மேல அனுதாபத்தை உண்டாக்கும். அந்த அனுதாபமே எனக்கு ஓட்டாக மாறும். இப்போ நான் ரிசைன் செஞ்சுட்டு திரும்பவும் நின்னாலும் என்னால் ஜெயிக்க முடியும், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. திமுக பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லை. என்னோட பலம் என்னன்னு எனக்கு தெரியும். நீங்க சொன்னபடி நானே முதல்ல ரிசைன் பண்றேன். எனக்கு இந்த திட்டத்துக்கு பரிபூரண சம்மதம். என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு தினாவோ, சபாஷ் ‘இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். தங்க தமிழ்ச்செல்வன் மாதிரி துணிச்சல் உங்க எல்லோருக்கும் வரணும். அவரு முதல்ல ரிசைன் செய்யட்டும். அதுக்கு எடப்பாடி தரப்புல என்ன ரியாக்‌ஷன் வருதுன்னு பார்க்கலாம். நாம நினைக்கிற மாதிரியான ரியாக்‌ஷன் வந்தால் எல்லோரையும் ரிசைன் செய்ய வைப்போம். இல்லை என்றாலும் தங்கத்தை எல்லோரும் சேர்ந்து திரும்பவும் ஜெயிக்க வைப்போம். உங்க தொகுதிக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்பதால் தொகுதி மக்கள் நலனை மனதில் வைத்து ரிசைன் செய்வதாக சொல்லுங்க. அதுதான் மக்களிடம் அனுதாபத்தை உண்டாக்கும்...’ என்று ஐடியா கொடுத்திருக்கிறார்.

அதற்கு ஆண்டிப்பட்டி தங்கமும் ஆமாம் என தலையாட்டி இருக்கிறார். தினா சொன்னதைப்போல நாளையோ அல்லது செவ்வாய் கிழமை, தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பாராம் ஆண்டிபட்டி தங்கம்.