Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுடன் கூட்டணி அமைத்து 25 ஆண்டுகளை வீணாக்கி விட்டோம்... அமித் ஷாவுக்கு சவால் விட்ட முதல்வர்..!

பாஜகவுடனான கூட்டணியில் சிவசேனா 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டது. நாம் ஏன் அவர்களை விட்டு ஒதுங்கினோம்? 

We have wasted 25 years in alliance with BJP ... Chief Minister who challenged Amit Shah
Author
Maharashtra, First Published Jan 24, 2022, 1:39 PM IST

கடந்த 25 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்து சிவசேனா வீணடித்துவிட்டது" என்று பாஜக மீது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கடுமையாக தாக்கியுள்ளார். 

சிவசேனா நிறுவனர் பாலாசாஹேப் தாக்கரேவின் பிறந்தநாளில் தனது கட்சி தொண்டர்களிடம் உரையாற்றிய முதல்வர் உத்தவ் தாக்ரே, கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸின் துணையோடு உள்ளூர் அளவில் கூட்டுறவுத் துறையில் நிறுவனங்களை உருவாக்குமாறு தனது கட்சியினருக்கு உத்தரவிட்டார்.We have wasted 25 years in alliance with BJP ... Chief Minister who challenged Amit Shah

கடந்த ஆண்டு நவம்பரில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதன்முறையாக பொது வெளியில் தோன்றிய மகாராஷ்டிர முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே இதனை தெரிவித்தார்.

அவரது அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் பதவியில் இல்லாததால் தொடர்ந்து அவரை பாஜக விமர்சித்து வந்தது. “விரைவில், நான் வெளியேறி மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்வேன். என் உடல்நிலை குறித்து கவலைப்படும் எதிரணியினருக்கு குங்குமப்பூவின் பலத்தை காட்டுவேன். ஒரு காபந்து அரசாங்கம் இருப்பதைப் போல, அவை காபந்து எதிர்க்கட்சியாக இருக்கின்றன. அவை தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும்.We have wasted 25 years in alliance with BJP ... Chief Minister who challenged Amit Shah

பாஜகவுடனான கூட்டணியில் சிவசேனா 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டது. நாம் ஏன் அவர்களை விட்டு ஒதுங்கினோம்? இன்று அவர்கள் காட்டுகின்ற வெற்று இந்துத்துவா என்பது அதிகாரத்திற்கான வேட்கையைத் தவிர வேறில்லை. 25 ஆண்டுகளாக நாங்கள் அவர்களை வளர்த்தெடுத்தது துரதிர்ஷ்டவசமானது.

அமித் ஷா புனே வந்து தனித்து போட்டியிடுவோம் என்று சவால் விடுத்தார். அந்த சவாலை தசரா பேரணியில் ஏற்றுக்கொண்டுள்ளோம். உங்களுக்கு தைரியம் இருந்தால், தொண்டர்களின்  போட்டியிடுங்கள். வெறுமனே எங்களுக்கு சவால் விடுவதும், அமலாக்க இயக்குநரகம் மற்றும் பிற அமைப்புகளை பின்னால் நிறுத்துவதும் தைரியம் அல்ல, ”என்று அவர் மேலும் கூறினார்.

‘பயன்படுத்தி விட்டு தூக்கி வீசுதல்’ கொள்கையில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. “நாங்கள் இந்துத்துவாவை கைவிட மாட்டோம். பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டோம். ஆனால், இந்துத்துவாவுடன் அல்ல. பாஜக இந்துத்துவா அல்ல. நீங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள், நாங்கள் மகாராஷ்டிராவைக் கவனித்துக்கொள்கிறோம். ஆனால் அவர்கள்தான் நம்மைக் காட்டிக்கொடுத்து நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு பல ஆண்டுகளாக உணவளித்தோம், அவர்கள் வென்ற பிறகு, அவர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் கொள்கையை ஏற்றுக்கொண்டனர்”என்று தாக்கரே கூறினார்.We have wasted 25 years in alliance with BJP ... Chief Minister who challenged Amit Shah

இந்துத்துவா தொடர்பாக பாஜக மீதான தனது தாக்குதலைத் தொடர்ந்த தாக்கரே, “பிரிட்டிஷர்களைப் போல அடிமைச் சூழலை உருவாக்குவது இந்துத்துவா அல்ல. உண்மையான இந்துக்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் உட்கார்ந்து விட்டால், அடிமைத்தனம் மீண்டும் வரும் என்பதுதான் நிலைமை. எமர்ஜென்சிக்கு எதிராக இருந்தவர்கள் நாட்டில் எமர்ஜென்சி போன்ற சூழலை உருவாக்குகிறார்கள். இதை உடைக்க அனைவரும் முன்வர வேண்டும்” என்றார். 

மேலும், மாநிலம் முழுவதும் கட்சியை பரப்பவும், ஒவ்வொரு தேர்தலையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், சேனா தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், நாங்கள் நான்காவது இடத்தில் உள்ளோம். ஆனால் நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தபோது பெற்றதை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளோம். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவது போல், இந்த தேர்தலில் நாங்கள் தீவிரமாக போட்டியிடவில்லை. பாஜக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என நமது தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்டத் தலைவர்கள் இந்தத் தேர்தல்களில் கவனம் செலுத்துகிறார்களா? என்பதை நாம் பார்க்க வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios