Asianet News TamilAsianet News Tamil

அடிதூள்... கொரோனாவுக்கு மருத்து ... தமிழக சுகாதாரத்துறை அதிரடி...!!

கொரோனா  வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கிடையாது என்பது பொய்யான தகவல் , முறையான மருத்துவ சிகிச்சை மூலம் கொரோனா  வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என்றார்

we have medicine for korona virus if we get proper treatment we can control from virus
Author
Chennai, First Published Jan 31, 2020, 11:35 AM IST

சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த 78 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் இவர்கள் அனைவரும் வீடுகளில் வைத்து 28 நாட்களுக்கு கண்காணிக்கப்படுவர் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார் .  சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா , ஆஸ்திரேலியா ,  பிரான்ஸ் ,  இந்தியா என எல்லை கடந்து பரவி வருகிறது .  இந்நிலையில்  சீனாவிலிருந்து வெளியேறிய இந்தியர்கள் அவசரமாக நாடு திரும்பியுள்ள  நிலையில் சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள்  இருப்பது தெரியவந்துள்ளது .  இந்நிலையில் கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது . 

we have medicine for korona virus if we get proper treatment we can control from virus

இந்நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   வைரஸ் பரவுவதற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன ,  தமிழ்கத்தில் ஏற்கனவே சார்ஸ்  நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு  அதிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் , கொரோனா வைரஸ் கைகளின் மூலமாகவும் ,  இருமல் அல்லது தும்மல் மூலமாகவும் பரவுகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே கைகளையும் தினமும் 15 முறையாவது கழுவ வேண்டும் கை வைக்கக் கூடிய இடங்களை சுத்தமாக வைக்கவேண்டும் ,  தும்மும்போது மூக்கை கைக்குட்டைகளால் பொத்திக் கொள்ள வேண்டும் .  முதியவர்கள் மற்றும் 2 வயது குழந்தைகளை கூட்டம் அதிகமாக உள்ள பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் . 

we have medicine for korona virus if we get proper treatment we can control from virus

விரைவில் தமிழகத்தில் சிறப்பு மருத்துவ பரிசோதனை வசதிகள் அமைக்கப்படவுள்ளது . கொரோனா  வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கிடையாது என்பது பொய்யான தகவல் , முறையான மருத்துவ சிகிச்சை மூலம் கொரோனா  வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என்றார். அதேபோல் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு திரும்பியுள்ள 78 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் .  அவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு வீடுகளில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள் .  சளி இருமல் காய்ச்சல் இதன் அறிகுறியாக உள்ளது . மற்றவர்களிடம் கை குலுக்குவதை தவிர்த்து நமது பாரம்பரிய முறையில் வணக்கம் சொல்வது சிறந்தது .  அதேபோல் கொரோனா வைரஸ்  எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது என  அவர் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios