முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா விழக்கில் சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது, இந்த நிலையில் ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துக்கள்  வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி ப.சிதம்பரத்தின் குடும்பத்திற்கு  சொந்தமான சொத்து பட்டியல் என்ற பெயரில் ஒரு பட்டியல் ஊடகங்களில்  வெளியாகி அது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தின் சார்பில் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  அதில் , எங்கள் குடும்பத்திற்கு நிறைவான சொத்துக்கள் இருப்பதால்  தவறான முறையில் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும், தங்களுக்கு பல நாடுகளில் சொத்துக்களும் வங்கி கணக்குகளும் இருப்பதாக ஊடகங்களில் வெளியான மிகைபடுத்தப்பட்ட செய்திகள் கண்டு மன வேதனையடைவதகாவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையின் முழுவிவரங்கள் பின்வருமாறு:-

கடந்த சில நாட்களாக மீடியாக்களில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தகவல்கள் பொய்யானவை. சிதம்பரத்தின் 50 ஆண்டு கால பொது வாழ்வில் கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயன்றாலும் உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உண்மை எது என தெரியாதவரை பொய் பிரசாரம் எதுவும் செய்ய வேண்டாம்.

நிறைவான சொத்துக்கள் கொண்ட, முறையான வருமான வரி செலுத்தும் சிறிய குடும்பம் எங்களுடையது. வெளிநாடுகளில் அறிவிக்கப்படாத வங்கி கணக்குகள், கணக்கில் காட்டாத சொத்துக்கள், போலி நிறுவனங்கள் பற்றிய ஆதாரத்தை அரசால் காட்ட முடியுமா? சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை. தேவையான சொத்துக்கள் இருப்பதால் தவறான முறையில் பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி தான். உண்மை நிரூபிக்கப்படும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பல நாடுகளில் சொத்துக்கள், வங்கி கணக்குகள் இருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது