we should fight rk nagar bye election

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று தீபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவினைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 எப்பாடு பட்டாவது ஆர்.கே. நகரை கைப்பற்றியே தீர வேண்டும் என்பதில் சசிகலா ஓ.பி.எஸ். அணியினர் தீவிரமாக உள்ளனர். பிராதன எதிர்க்கட்சியான திமுக, அதிமுகவில் இருக்கும் பிணக்குகளையும்,பிளவுகளையும் பயன்படுத்தி ஆர்.கே. நகரில் வெற்றி பெற முயற்சிக்கும்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆர்.கே. நகரில் களமிறங்குவது உறுதி என்று தெரிவித்துள்ளார். 4 முனைப் போட்டியை சந்திக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு வெற்றி மகுடத்தை அளிக்கப் போகிறது என்பதற்கான விடை ஏப்ரல் 15 ஆம் தேதி தெரிந்துவிடும்....