ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பாதிப்பு இல்லை என்று ரஜினிக்கு நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் , குமரரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அந்த பகுதி மக்கள் கடந்த 49 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலையால் கேன்சர், தோல் நோய், மூச்சு திணறல் உள்ளிட்டவை ஏற்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அரசியல் கட்சிகட்சிகளும் முதலில் குரல் கொடுத்துவிட்டு பிறகு அமைதியாக அடங்கிவிடுகிறார்கள்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை பற்றி ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால்

பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளத இது ஏன் என்று ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் ரஜினிக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் டுவிட்டரில் பதில் அளித்துள்ளது.

“காப்பர் குறித்த விளக்கங்களை ஸ்டெர்லைட் நிறுவனம் ரஜினிக்கு அளித்துள்ளது. அதில் எங்களது நிறுவனம் பற்றி உங்களுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை யாரோ உங்களுக்கு அளித்துள்ளார்கள். வாழ்க்கை முறை மாற்றமே புற்றுநோய் வர காரணம் என பல்கலை ஆய்வுகள் கூறுகின்றன.

காப்பரால் கேன்சர் ஏற்படும் என்பதற்கான ஆதாரம் இல்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றியுள்ள 1 .கி.மீ .சுற்றளவில் 20 ஆண்டுகளாக மூத்த நிர்வாகிகள் வசித்து வருகின்றனர்.மேலும், சென்னை, காஞ்சிபுரம், கோவை,குமரி, திருவள்ளூர், கடலூர் மாவட்டத்தில்தான் புற்றுநோய் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன என்று அந்த பதில் அளித்துள்ளது.