நாங்கள் வெல்வோம், உங்களை அழிப்போம்... என சீன ட்ராகனோடு மல்லுக்கட்டும் தைவான் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்திய ராமர் படத்தை பெரும்பாலானோர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய - சீன எல்லை மோதலை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக லடாக் பகுதியில் இந்திய ராணுவ துருப்புகளும், சீன ராணுவ துருப்புகளும் மோதிக்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இருநாட்டு எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர். சீனத்தரப்பில் 45க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இந்ருநாட்டு தரப்பிலும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 1964ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுடன் சீன ராணுவத்திற்கு உருவான இந்த மோதல் உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது. இதுகுறித்து தைவான் நாட்டின் நாளிதழில் இந்தியா சீனா மோதல் தொடர்பாக புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தப்படத்தில், "நாங்கள் வெல்வோம், உங்களை அழிப்போம்" என்ற தலைப்பில் சீனாவின் ட்ராகனுடன் இந்து கடவுளான ஸ்ரீ ராமர் சண்டை போடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.