ஐபிஎல்  போட்டிகளால் காவிரி பிரச்சனை திசை திருப்பப்பட வாய்ப்பில்லை என்றும் அதே நேரத்தில், போட்டிகளை நடத்தக கூடாது என்று நாங்கள் கூறிவில்லை என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்று மாலை தொடங்குகின்றன. இதில் 7 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன.வரும் 10 ஆம் தேதி சென்னையில் ஐபிஎஸ் போட்டி நடைபெறவுன்ளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி பிரச்சினைக்காக நடைபெற்று வரும் போராட்டங்களை கருத்தில் கொண்டு, சென்னையில் ஐபிஎல். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலினிடம் ,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளால் காவிரிக்கான போராட்டங்கள் திசை திருப்பப்படுவதாக கூறப்படுகிறதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு  பதில் அளித்த அவர் எங்களை பொறுத்தவரையில் அதை நடத்தக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. போட்டிகளை ஏற்பாடு செய்திருப்பவர்கள், மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.