மனிதநேய ஜனநாயக கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை என எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது எம்ஐடி பல்கலைக்கழகம். இந்தியாவின் புகழ்பெற்ற முதல் 10 தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில் 58,000-க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் வழிகாட்டலின்படி, இந்திய மாணவர் நாடாளுமன்றம் என்ற அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. 

எதிர்காலத்தில் கொள்கையும் திறமையும்கொண்ட அரசியல் தலைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அந்த வகையில் இந்தியாவின் முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களைக் கண்டறிந்து இப்பல்கலைக்கழகம் விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த இளம் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.வும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் மு.தமிமுன் அன்சாரிக்கு வழங்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை பேட்டியளித்த எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி;- இந்த விருதை நாகப்பட்டினம் மக்களுக்கும், மனித நேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களுக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வரும் 29-ம் தேதி கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ள தமிமுன் அன்சாரி அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை என கூறியுள்ளது ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே, குடியுரிமை சட்டம், அதிமுகவுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அவரை விரைவில் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.