தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினர்களாக இருப்பவர்களில் ஆறு பேரின் பதவி காலம் நிறைவடைவதை அடுத்து அந்த இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து திமுகவிருக்கும் அதிமுகவிற்கு தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதையடுத்து திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. ஆகிறார், மாநிலங்களவை தேர்தலில் மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி போட்டி

அதிமுகவிடம் தேமுதிக ஒரு இடம் கேட்டு முரண்டு பிடித்து வந்த நிலையில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது. இந்தநிலையில் அதிமுக சார்பாக மாநிலங்களவைக்கு தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோரும் மற்றொரு இடத்தில் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இது தேமுதிகவை கோபத்தில் தள்ளியிருக்கிறது. இந்தநிலையில் பாஜக மேலிடத்தின் நிர்பந்தம் காரணமாகவே வாசனுக்கு இடம் ஒதுக்கப்பட்டதாக தற்போது செய்திகள் உலாவுகின்றன.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்..!

இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தாமகவிற்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது அதிமுக ஆட்சிமன்ற குழு எடுத்த முடிவு என்றார். பாஜக அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு தாங்கள் குழந்தைகள் அல்ல என்றும் அனைத்தையும் சிந்தித்தே செய்வதாக கூறினார். அதிமுக என்கிற ஆலமரம் எல்லோருக்கும் நிழல் தரும் என்ற அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் திமுக போல அதிமுக தனது கூட்டணி கட்சிகளை உதாசீனப்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

கொரோனாவிடம் தப்ப கள்ளச்சாராயம் குடித்த மக்கள்..! 27 பேர் துடிதுடித்து பலி..!.