இந்திய கொடிகள் இருந்ததால் சோதனைச் சாவடிகளை கடக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் துருக்கியை சேர்ந்த சில மாணவர்களும் இந்திய தேசியக்கொடியை பயன்படுத்தி எல்லையை கடந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதே போல் உக்ரேனில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை பாகிஸ்தான் கைவிட்டு விட்டதாகவும் பாகிஸ்தான் மாணவர்களே கூறியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 30 பேர் கொண்ட குழு உக்ரைனில் இருந்து கொண்டு இந்தியர்கள் 3 ஆயிரத்து 500 பேர் அந்த நாட்டின் எல்லையை கடக்க உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைமாறு கருதாத இந்த உதவி பற்றி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரஜ்மிந்தர் கவுர் என்ற மாணவி தன்னுடைய காணொளி மூலம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாடு நினைத்தால் ஒரே நாளில் ஒட்டு மொத்த உக்ரேனையும் அடித்து வீழ்த்தி விட முடியும், ஆனால் அது அல்ல நோக்கம், உக்ரேனை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதால் அதை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகிறது ரஷ்ய ராணுவம். இதற்கிடையில் அங்கு சிக்கியுள்ள பல்வேறு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வழி தேடி அலைந்து வருகின்றனர்.
உக்ரேனில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளான ரொமேனியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கிருந்து இந்தியர்கள் மீட்க்கப்பட்டு வருகிறார்கள். கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில் தங்குவதற்கு கூட இடம் இன்றி இந்திய மாணவர்கள் உள்ளிட்டோர் அங்கு தவித்து வருகின்றனர்.

உக்ரேனில் இருந்து போலந்து வழியாக வரும் இந்திய மாணவர்களை உக்ரேன் வீரர்கள் அடித்து மிரட்டுவதாகவும், சிலரிடமிருந்து செல்போன்களை பறிப்பதாகவும் கூறப்படுகிறது. பல உக்ரேன் ராணுவத்தினர் இந்திய மாணவர்களை நோக்கி, உங்கள் இந்தியா எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை, அதனால் நாங்கள் ஏன் உங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கடுமையாக பேசுவதாகவும் இந்திய மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உக்ரைனுக்கு எதிராக ஐநா கொண்டுவந்த தீர்மானத்தின் போது இந்தியா அதில் வாக்களிக்காமல் விலகிய நிலையில் உக்ரேன் ராணுவத்தினர் இந்திய மாணவர் களிடம் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அதற்கான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உக்ரேன் எல்லையில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது வேதனையாக இருக்கிறது. இந்தியர்களை மீட்க விரிவான திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்ன பதிவிட்டுள்ளார்.
அங்குள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மாணவர்களுக்கு உதவி வருகின்றன, இந்திய அரசும் விரைவில் பல விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்டு வர முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் சேவா இன்டர்நேஷனல் என்ற அமைப்பினர் உக்ரேனில் சிக்கியுள்ள சுமார் 300 இந்தியர்கள் எல்லையை கடக்க உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் ஆர்எஸ்எஸ் தான் செய்கிற எந்த சேவைக்கும் விளம்பரம் செய்து கொள்ளாது.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருக்கும் அமைப்புதான் ஆர்எஸ்எஸ், நல்லவேளையாக இந்த அமைப்பு செய்துள்ள மகத்தான சேவையை உக்ரைனில் படித்து வரும் பஞ்சாப் மாணவி வெளிப்படுத்தியுள்ளார். இல்லையென்றால் இந்த சேவை வெளியுலகிற்கு தெரியவராமலேயே போயிருக்கும். மோடி அரசின் ஆபரேஷன் கங்கா மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்கு தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்தியாவின் துரிதமான மீட்புப் பணியை சர்வதேச சமூகம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த நாடும் தனது நாட்டு மக்களை காக்க இந்த அளவிற்கு முனைப்பு காட்டவில்லை, இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து அச்சமின்றி எல்லையை நோக்கிச் செல்லுமாறு குடிமக்களை இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்யா உடனான இந்தியாவின் உறவு இத்தகைய மீட்பு பணியை சாத்தியமாகியுள்ளது.
உக்ரேனில் இருந்து ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரத்திற்கு வந்த இந்திய மருத்துவ மாணவர் ஒருவர் கூறும்போது உக்ரேனில் பல தடைகளையும், சோதனைச் சாவடி களையும் கடக்க வேண்டியிருந்தது. அப்படி கடக்க இந்தியதேசிய கொடி தேவைப்பட்டது, அப்போது அங்கு கொடி கிடைக்காத காரணத்தால் கடைகளில் இருந்த திரைச்சீலைகளை வாங்கி அதை வெட்டி அதில் இந்திய மூவர்ண நிறத்தை ஸ்பிரே செய்து இந்திய தேசியக் கொடியை தயாரித்தோம் என்று கூறியுள்ளார். இந்திய கொடிகள் இருந்ததால் சோதனைச் சாவடிகளை கடக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் துருக்கியை சேர்ந்த சில மாணவர்களும் இந்திய தேசியக்கொடியை பயன்படுத்தி எல்லையை கடந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதே போல் உக்ரேனில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை பாகிஸ்தான் கைவிட்டு விட்டதாகவும் பாகிஸ்தான் மாணவர்களே கூறியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் மாணவர்களும் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு உக்ரேனில் இருந்து வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாதத்தின்போது பேசிய ஒருவர் இந்த உண்மையை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இவ்வாறு கோலாகல சீனிவாசன் தனது யூடியூப் பேட்டியிலு கூறியுள்ளார்.
