பதவிக்காக நான் அலைபவன் அல்ல. எம்.எல்.ஏவாக விரும்பவுலில்லை சுயமரியாதையும், தன்மானமும் தான் எனக்கு முக்கியம் என  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.  

மருத்துவமனையில் குடல்பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் போல அரசியல் செய்ய விரும்பவில்லை. நான் எந்தக் கூட்டணியிலும் இல்லை. பதவிக்காக நான் அலையவில்லை. எம்.எல்.ஏ பதவவியை விரும்பவும் இல்லை. சுயமரியாதை, தன்மானம் எனக்கு முக்கியம். டி.டி.வி.தினகரன் நான் கூட்டணிக்கு வருவேன் எனக் காத்திருந்தார்.

ஆனால் நான் செல்லவில்லை. என் வீட்டுக்கு வந்தும், மருத்துவமனைக்கு வந்தும் கூட்டணிக்கு வாருங்கள் என்று பல்வேறு கட்சியினர் அழைத்தனர். மருத்துவமனைக்கு வந்து பல தலைவர்கள் மணிக்கணக்காக என்னை சந்தித்து பேசிச்சென்றனர். எனக்கு மரியாதையும், முக்கியத்துவமும் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி சேர்வேன். மருத்துவக்குழு அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தலுக்காக நான் அலையவில்லை. எனக்கு எந்தப்பிரச்னையும் இல்லை.

குடல் பிரச்னை இருப்பதால் ஓய்வெடுத்து வருகிறேன். வன்னிய இனமக்கள் அனைவரும் என் பின்னால் அணி திரண்டுள்ளனர். நான் அதிமுக, திமுக என அனைத்து கட்சியினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறேன். அரசியலில் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற பொறுப்பு எனக்கிருக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.