ஃபிப்சர்- பயோஎன்டெக் என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியை தங்களது நாட்டில் பரவலாக பயன்பாடுத்துவதற்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தற்போது இத் தடுப்பூசி அந்நாட்டு மக்களின் பயண்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நாட்டில் 90 வயது மூதாட்டிக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க உலகின் முன்னணி நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியானது.  அதில் தடுப்பூசி 90% கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது.  இந்த தடுப்பூசியால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாததே இதன் சிறப்பு எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் கொரோனா வைரசை எளிதில் கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவித்தது. 

பல நாடுகளும் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்க ஆர்வம் காட்டி வந்தன. இந்நிலையில் தடுப்பூசியை வாங்க இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்திருந்தது,  டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தவும், இங்கிலாந்து முடிவு செய்திருந்தது. எனவே டிசம்பர் முதல் வாரம் முதலே இங்கிலாந்து சுகாதாரப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்ஹாக்  உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் ஃபிப்சர் பயோடெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் செயல்பாடுகளை தீர ஆராய்ந்த இங்கிலாந்து,  தங்களது நாட்டு மக்களுக்கு பரவலாக பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது இந்நிலையில், இங்கிலாந்தில் இன்று முதல் குழந்தை தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதாவது பரிசோதனைகள் தவிர்த்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதல்நபராக 90 வயது மூதாட்டியான மார்க்ரெட் கெனென் என்பவருக்கு போடப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசியை 90 வயது மூதாட்டி ஏற்றுக்கொண்டிருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தடுப்பூசியை நாடு முழுவதும் பயன்படுத்த ஒப்புதல் வழங்கிய உலகின் முதல் நாடாகவும் இங்கிலாந்து திகழ்கிறது. இந்நிலையில்  சுமார் 50 மருத்துவமனைகள் தயாராக உள்ளன. பொதுக்கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் மைதானங்கள்,  விளையாட்டு உள் அரங்குகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இங்கிலாந்து நேரப்படி சரியாக காலை 6.31 மணிக்கு மார்க்ரெட்டுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ப்பட்டது. தற்போது முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்கு பின்னர் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது.