நெல்லை கண்ணன் தமிழகத்தில் உள்ள சமய சொற்பொழிவாளர்களுள் முக்கியமானவராக கருதப்படுகிறார். ஆனால் அவரது பேச்சில் எப்போதுமே நாகரீகம் இருந்தது கிடையாது. யாராக இருந்தாலும் அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசுவதோடு மட்டுமல்லாமல் தன்னைவிட புத்திசாலி வேறு யாரும் கிடையாது என்கிற ரீதியில் பேசுவார். 

மேலும் தனது ராமாயண சொற்பொழிவில் ராமன், ராவணன் உள்ளிட்ட பாத்திரங்களையும்  அவன் இவன் என்றுதான் சொல்லுவார். அண்மையில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை  அவன், இவன் என்று ஒரு பேட்டியில்  மரியாதைக்குறைவாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தில் தவ்ஹித் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் நெல்லை கண்ணன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

நெல்லை கண்ணன் பேசும் போது, மோடி முதல் முறை பிரதமரான போது, 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்றும், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என தெரிவித்தார்.

அதை நம்பி  இந் நாய்கள் ஓட்டுப் போட்டாய்ங்க… ஏமாளிப்பயல்கள்… ஆனால் தமிழ்நாட்டுக் காரங்க விவரமானவங்க…அவங்க ஏமாறமாட்டாங்க… ஆனால் வட நாட்டு மக்கள் எல்லாம் மோடியில் ஏமாத்துப் பேச்சை நம்பி  ஓட்டுப் போட்டுடாய்ங்க என வாக்காளர்களை கேவலாமாக நாய்கள் என்று பேசினார்.

தற்போது நெல்லை கண்ணன் மீது வன்முறையைத் தூண்டியதாகவும், கொலை முயற்சி பேச்சு பேசியதாகவும் தமிழக பாஜக  போலீசில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.