Sasikala Vs Aiadmk: அதிமுகவில் அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்க திட்டமிட்டார். அவர்களை சந்திப்பதற்காக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெரிதாக எதுவும் சசிகலாவுக்கு கைகொடுக்கவில்லை.
சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்ற அதிரடி காட்டக் கூடாது என்பதால் விட்டு பிடிக்கலாம் என முடிவு செய்தார். இதனால்தான் அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாக அறிக்கை விட்டிருந்தார். இதையடுத்து அதிமுகவின் சட்டசபை தேர்தல் தோல்வி, கோஷ்டி பூசல், இரு தலைமைகளுக்கிடையேயான பனிப்போர் உள்ளிட்டவைகளை பார்த்த சசிகலா, அதிமுகவை இனியும் கைப்பற்றாமல் விட்டு விட்டால் கட்சி நிலைமை மோசமாகிவிடும் என்பதால் அவர் தலையிட தொடங்கிவிட்டார்.
அதிமுகவை விட்டுவிட்டால் அதன் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும் என்பதால் அதிமுகவில் அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்க திட்டமிட்டார். அவர்களை சந்திப்பதற்காக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெரிதாக எதுவும் சசிகலாவுக்கு கைகொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி அவ்வப்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை விமர்சிக்க தவறுவதில்லை.

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூட, இதனை நிரூபிக்கும் வண்ணம் பேசியுள்ளார். அவர் பேசிய போது, ‘திராவிட மாடல் என திமுக அரசு தற்போது பேசி வருகிறது. ஆனால் அதிமுக ஏற்கனவே திராவிட மாடலை உருவாக்கி சமூக நீதியை செயல்படுத்தி வந்தது.குறிப்பாக, அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்களுக்காக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை சமுக நீதி நோக்கோடு செயல்படுத்தப்பட்டன.பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்வது தான் திராவிட மாடலா?
பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் நான் பாஜகவிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் கட்சிக்கு நான் வர வேண்டும் என்ற அவரது ஆசையை தெரிவிக்கிறார் வேறு ஒன்றும் இல்லை. நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று பேசி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : ”அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு சொல்கிறேன்..” அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த ஐ.லியோனி!
இதையும் படிங்க : G Square : ஜி ஸ்கொயர் விவகாரத்தில் இதுதான் நடந்தது.. உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் முத்துசாமி !
