”அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு சொல்கிறேன்..” அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த ஐ.லியோனி!
Annaamalai Vs Leoni : அரைவேக்காட்டு அரசியல் தலைவர் ஒருவர் என்னுடைய தலைவர் சமூகநீதியை கடைபிடிக்கவில்லை என்று கூறி வருகிறார். இல்லாத பொருளுக்கு 70 கோடி நஷ்டம் என்று கூறி வருகிறார். அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு நான் சொல்கிறேன்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகர திமுக சார்பில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், ‘ அறிஞர் அண்ணாவின் குரல் 50 சதவீதம், கருணாநிதியின் குரல் 50 சதவீதம் ஆகிய இவை இரண்டும் சேர்ந்த குரல் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் நமது முதல்வருக்கு இருவரின் குரல்களும் உள்ளது. அரைவேக்காட்டு அரசியல் தலைவர் ஒருவர் என்னுடைய தலைவர் சமூகநீதியை கடைபிடிக்கவில்லை என்று கூறி வருகிறார். இல்லாத பொருளுக்கு 70 கோடி நஷ்டம் என்று கூறி வருகிறார். அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு நான் சொல்கிறேன்.
ஆயிரம் பாஜக வந்தாலும் திமுகவை தமிழகத்தில் எந்த கொம்பனாலும் தொட முடியாது. அவரது செயல்பாடுகளையும் அழிக்க முடியாது. திராவிட மாடல் ஆட்சி நல்லதை உருவாக்கும் எதையும் கெடுக்காது. யாரையும் பிரிக்காது எல்லாவற்றையும் சேர்க்கும். யாரையும் கெடுக்காது மற்றவர்களை உருவாக்கும். யாரையும் சிதைக்காது எல்லாவற்றையும் உருவாக்கும் என்று கூறினார்.
முன்னதாக பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசிய திண்டுக்கல் ஐ. லியோனி பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு புரட்சி பாரதம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் கூட்டம் முடிந்த பின்பும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் ஐ. லியோனி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கொரோனா இன்னும் முடியல.. மக்கள் உஷாரா இருக்கணும்.! எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
இதையும் படிங்க : கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !