vivek going to arrest soon

ஜெயா டிவி நிர்வாகியும், இளவரசியின் மகனுமான விவேக்கின் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் காலை தொடங்கி, தொடர் சோதனை நடத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

போலி நிறுவனங்கள் மூலம் பல கோடி மதிப்புள்ள 40 சொத்துக்கள் வாங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

குறிப்பாக, ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதன் நிர்வாகி விவேக் வீட்டில் நேற்று முன் தினம் காலை தொடங்கி, விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விவேக்கை கைது செய்யவும் வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கியது வருமான வரித்துறை

தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது வருமானவரித்துறை என்பது குறிப்பிடத்தக்கது