பாஜகவை சேர்ந்த டிக்டாக் புகழ் சோனாலி போகாத், ஹரியானா விவசாயிகள் சந்தைக் குழுவின் மூத்த அதிகாரியை தவறான நடத்தை தொடர்பாக செருப்பால் அடித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் இன்று வைரலாகியுள்ளது.


வைரல் வீடியோவில், பாஜக தலைவர் பலமுறை அதிகாரியை ஒரு செருப்பால் அறைந்து, “என்னை துஷ்பிரயோகம் செய்ய உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என்று கூறியது பதிவாகியுள்ளது. வீடியோவில் உள்ள நபர் ஹிசார் சந்தைக் குழு செயலாளர் சுல்தான் சிங் என அடையாளம் காணப்பட்டது.

பாஜக வேட்பாளராக 2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற போகாத், உழவர் சந்தையை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இன்று இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொள்முதல் பணியில் சிங் வேண்டுமென்றே தடைகளை உருவாக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தனது ட்விட்டர் பதிவில்.. "ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

 

“ஹரியானா பாஜக தலைவரின் தவறுகள்! ஆதம்பூரைச் சேர்ந்த பாஜக தலைவர் ஹிசார் சந்தைக் குழு செயலாளரை விலங்குகளைப் போல அடித்து வருகிறார். அரசாங்க வேலை செய்வது குற்றமா? கட்டார் சாஹேப் நடவடிக்கை எடுப்பாரா? ஊடகங்கள் இன்னும் அமைதியாக இருக்குமா?” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.