Asianet News TamilAsianet News Tamil

2011, 2016 ல் மறக்க முடியாத சம்பவம் பண்ண சிவி சண்முகம்! வேறு வழியே இல்லாமல் புகழை இழுத்து விட்ட பொன்முடி!

எத்தனை கோடி வாரி இறைத்தலும் பாமகவின் வாக்கு வங்கி, சிவியின் மாஸ், பண பலத்தை தாண்டி ஜெயிக்கவைக்க முடியுமா?  என திமுகவினர் பீதியில் இருக்கிறார்களாம்.

villupuram's mass leader c.ve shanmugam next game
Author
Villupuram, First Published Sep 24, 2019, 1:50 PM IST

விழுப்புரத்தை பொறுத்தவரை, திமுகவில் பொன்முடி, அதிமுகவில் அமைச்சர் சிவி சண்முகம் இவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காத செல்வாக்கு பெற்றவர் முன்னாள் எம்பி லட்சுமணன், இவர் ஓபிஎஸ் அணியில் இணைந்து அதிமுகவை உடைத்ததில் பெரும் பங்கு இவருக்கு உள்ளது. அதாவது ஓபிஎஸ்-ன் பயங்கர வெறியர் என்றே சொல்லலாம், கடந்த முறை எம்பி தேர்தலிலேயே இவர் சீட் கேட்டிருந்தார். ஆனால் அது சிவியின் தலையீட்டால் கொடுக்கப்படவில்லை,  இந்த முறை எப்படியாவது இடைத்தேர்தலில் ஆவது போட்டியிட வேண்டும் என்று விருப்பமாக இருக்கிறார். மற்றொரு புறம் அமைச்சர் சிவி சண்முகம், தன்னுடைய அண்ணன் ராதாகிருஷ்ணனை இங்கு நிறுத்த வெகு ஆர்வமாக இருக்கிறார். 

திமுக எம்எல்ஏ மறைந்த உடனேயே, எப்படியும் தன் அண்ணனை இங்கு தான் நிறுத்தியாக வேண்டும் என என்று முடிவு செய்து, அதற்கான பூத் ஏஜென்ட் கவனிப்பு வேலைகளிலும் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. காரணம் இங்கு அதிமுக, திமுகவிற்கு இணையாக பாமக பலமான வாக்கு வங்கியை வைத்துள்ளது.  

villupuram's mass leader c.ve shanmugam next game

பாமக இந்த தொகுதியை கேட்டும், சிவி சண்முகம் கொடுக்க மறுத்துள்ளார். எப்படியாவது தனது அண்ணனை களமிறக்க வேண்டும் என பிளான் போட்டு வந்துள்ளார். ஆனால், அவருடைய மகனுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு, சிகிச்சையில் இருப்பதால், தேர்தலில் ராதாகிருஷ்ணன் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டாராம். அவரது அன்னான் நிற்கவில்லை என்பதால் உள்ளே புகுந்து விடலாம் என யாரும் நினைத்துவிட முடியாது. காரணம் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் மொத்த ரைட்ஸும் சிவி சண்முகத்துக்கு கொடுத்துள்ளார் எடப்பாடி.

அதனால், தற்போது  சிவி சண்முகம் மனசு வைத்தால் யார் நின்றாலும் சர்வ சாதாரணமாகவே ஜெயித்துவிடலாம் என்பதால், பலரும் விக்கிரவாண்டிக்காக போட்டி போட்டு வருகின்றனர். 

இதற்கான காரணம் பயங்கர சுவாரஷ்யம்... விழுப்புரத்தில் தனி கெத்துடன் வலம் வருபவர் சிவி சண்முகம், 2001, 2006 ல் என இரண்டுமுறை திண்டிவனம் தொகுதியில் ஜெயித்தார். விழுப்புரம்  திமுகவின் கோட்டை என மார்தட்டிக் கொண்டிருந்த திமுகவின் அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியை சி.வி.சண்முகத்தை வைத்து 2011 தேர்தலில் மண்ணைக் வைத்தார். அடுத்து 2016 தேர்தலில் திருக்கோவிலூருக்கு துரத்திய பெருமையும் இவரையே சாரும், அப்படி களத்தில் இறங்கினால் எதிரி காலி, அந்த அளவிற்கு சிவி விழுப்புரத்தில் கெத்தான வெயிட்டு கை, அதனால் அதிமுகவினர் பலரும் விக்கிரவாண்டியில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர்.

villupuram's mass leader c.ve shanmugam next game

இன்னொரு பக்கம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்துக்காரர் என்பதாலும், அவரும் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், துட்டு விஷயத்திலும் சிவி சண்முகத்தை சமாளிக்க ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்தை விக்கிரவாண்டியில் நிறுத்தினால் நல்லாருக்கும் என ஸ்டாலினுக்கு ஐடியா கொடுக்க, இந்த மேட்டர் பொன்முடிக்கு தெரியவர விருப்பமே இல்லாத புகழேந்தியை இழுத்து விட்டுள்ளார்.

புகழேந்திக்கு இந்த தெரிதலில் நிற்க விருப்பமே இல்லையாம் காரணம், இன்னும் அப்படி இப்படின்னு பார்த்தால் கூட வெறும் 15 மாசம் தான் இருக்கு, இந்த 15 மாசத்துக்காக கோடிக்கணக்கில் கொட்டி நிற்க்கணுமா? நான் ஜெயித்தாலும் பெருசா ஒன்னும் ஆட்சி மாற்றமும் வந்திடப்போவதில்லை, எக்ஸ்டராவா ஒரு எம்.எல்.ஏ தான் அதற்காக நான் நிற்க்கணுமா? வேற யாருக்காவது கொடுத்திருங்கன்னு சொல்லிட்டாராம். ஆனாலும் ஜகத் ரட்சகனின் குடும்பத்தை இங்கே இடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக பொன்முடியும் தனது கெத்தை விடக்கூடாது என களமிறக்கியதாக தெரிகிறது.

villupuram's mass leader c.ve shanmugam next game

ஆனால், எத்தனை கோடி வாரி இறைத்தலும் பாமகவின் வாக்கு வங்கி, சிவியின் மாஸ், பண பலத்தை தாண்டி நம்ம ஆள ஜெயிக்கவைக்க முடியுமா?  என திமுகவினர் பீதியில் இருக்கிறார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios