Asianet News TamilAsianet News Tamil

விக்கிரவாண்டியில் சி.வி.சண்முகம் அண்ணனுக்கு வழிவிடுவாரா ஓபிஎஸ் ஆதரவாளர்... அதிமுகவில் போட்டாபோட்டி..!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கும், முன்னாள் எம்.பி.லட்சுமணனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 
 

Vikravandi Constituency by-election...cv shanmugam brother Competition
Author
Tamil Nadu, First Published Sep 23, 2019, 4:03 PM IST

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கும், முன்னாள் எம்.பி.லட்சுமணனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. 

Vikravandi Constituency by-election...cv shanmugam brother Competition

இந்த தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வினர் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் போட்டி போட்டு விருப்ப மனு வாங்கி வருகிறார்கள். முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வழக்கறிஞர் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.Vikravandi Constituency by-election...cv shanmugam brother Competitionஇந்த இடைத்தேர்தலில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மறுபுறம் அவருக்கு இடைத்தேர்தலில் நிற்க விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.  

மேலும், ஓபிஎஸ் அணியில் இணைந்து அதிமுகவை உடைத்ததிலும் முன்னாள் எம்.பி. லட்சுமணன் முக்கிய பங்காற்றினார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால் எப்படியாவது இடைத்தேர்தலில் சீட் பெற்று விட வேண்டும் தீவிரமாக உள்ளார். 

Vikravandi Constituency by-election...cv shanmugam brother Competition

கடந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக 41,428 வாக்குகள் பெற்றிருந்தார். பெற்றது. பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் எப்படியும் இந்த தொகுதியை தங்கள் வசம் ஆக்கி விடலாம் என்று அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டியுள்ளனர். இதுவரை 90 பேர் விருப்பமனுவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர்  9 பேர் கொண்ட ஆட்சி மன்றக்குழு நேர்காணல் நடத்த உள்ளது. பிறகு இன்று அல்லது நாளை அதிமுக வேட்பாளரை அறிவிக்க உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios