விக்ரம் பட சென்சார்.. அனைவரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. வேகமாக இறங்கிச் சென்ற கமல்..
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டு வேக வேகமாக புறப்பட்டு சென்றது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டு வேக வேகமாக புறப்பட்டு சென்றது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. விக்ரம் பட சென்சார் பணிகள் இருப்பதால் அனைவரும் தன்னை மன்னித்தருள வேண்டும் எனக்கூறி அவர் நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தில் அவரே எழுதி பாடியுள்ள பாடல் பத்தலே பத்தலே பாடல் ஆகும். இந்த பாடல் வெளியாகி செக்கப் போடு போட்டு வருகிறது. அதேநேரத்தில் இப்பாடல் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்துள்ளது. மத்திய அரசை திருடன் என்று அவர் விமர்சித்துள்ளார், இதற்கு பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும் அந்தப் பாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. அவர் இந்த பாடலுக்கு லோக்கலாக டான்ஸ் ஆடியிருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ராஜா கைய வச்சா, அண்ணாத்த ஆடுறார், காசு மேல காசு வந்து, ஆழ்வார்பேட்டை ஆண்டவா போன்ற பாடல்கள் வரிசையில் அவரின் பத்தல பத்தல என்ற இந்த பாடலும் இடம்பெற்றுள்ளது.
இந்த பாடலை விமர்சித்துள்ள நடிகை கஸ்தூரி சகலகலாவல்லவன்- மார்க்கண்டேயன் கமல், வானதி அம்மையாரிடம் தோற்ற காண்டு மொத்தத்தையும் லிரிக்ஸ்சில் இறக்கியிருக்காப்பல ஒன்றிய ங்கற ஒத்த வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கி டாப்ல, கூட்டணி ஆட்சியில் இல்லனாலும் படக்காட்சியில் வந்துருச்சு. என்று பதிவு செய்துள்ளார். பலரும் பல வகையில் இந்த பாடலை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐசரி வேலன் 35வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது மகன் ஐஸ்வர்யா கணேஷ் சார்பில் நலிவடைந்த ஆயிரம் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவுண்டமணி, செந்தில், ஆர்கே செல்வமணி, பிரசாந்த், பாக்கியராஜ், நடிகை லதா, ஜெயசித்ரா, பூர்ணிமா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் ஐசரி வேலன் சிலையைத் திறந்து வைத்தார். மேடையில் பேசிய கமல், ஐசரி வேலன் பதவியும் பொறுப்பும் கிடைத்த பிறகும்கூட நடிக்க வந்தார், நடிப்பின் மீது இருந்த காதலால் தான் அவர் நடித்தார். அவரின் அந்த காதலின் காரணமாகவே நாங்களும் வந்திருக்கிறோம். அந்தகால நினைவுகளை இந்த மேடை உருவாக்குகிறது. நினைவுகளை யோசித்துப் பார்த்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்கிறோம் என்று புரிகிறது என பேசிக் கொண்டிருந்தவர் திடீரென விக்ரம் திரைப்படத்தின் சென்சார் பணிகள் நடைபெறுவதால் உடனே செல்ல வேண்டும் என கூறியதுடன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வேகவேகமாக கிளம்பினார் இன்னும் சிறிது நேரம் பேசுவார் என பலரும் எதிர் பார்த்த நிலையில் அவர் இரண்டொரு வார்த்தையில் புறப்பட்டு சென்றது பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.
அதன் பின்னர் மேடையில் பேசிய எஸ்.வி சேகர் கலைத்துறை பொருத்தவரை நன்றியை எதிர்பார்க்க கூடாது. ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார் ஐசரி கணேசன். ஒன்றிய ஒன்றாத கருத்துக்கள் உடையவர்கள் பலரும் ஒன்றுபவராக இருப்பவர் ஐசரி கணேசன் அவர் நலமாக இருக்கவேண்டும் என்றார்.