விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நல குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி இறந்தார். இதையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 21-ந் தேதி நடைபெற்றது. 

இந்த தொகுதியில் முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.), புகழேந்தி (தி.மு.க.), கந்தசாமி (நாம் தமிழர் கட்சி) மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

இத்தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 84.41 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தல் முடிவடைந்ததும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருத்ன.

இதையடுத்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் முன்னிலை பெற்றுள்ளார்.