விஜயசாந்தி என்ன பெரிய கொம்பா..?? நடிச்சதே 10 படம் தான் 2 தான் ஓடுச்சு.. டார்டாரா கிழித்த திலகவதி IPS.
நம் நாட்டிற்கே உரிய சகிப்புத்தன்மையுடன் மைக்கேல் பட்டி மக்கள் நடந்து கொண்டுள்ளனர். இந்த சகிப்புத்தன்மையுடன் அவர்கள் இருந்ததால் தான் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி விசாரணை.. விசாரணை எனக்கூறி ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள், இனிமேல் விசாரணை என்ற பெயரில் யாரும் ஊருக்கு வரக்கூடாது என கோரி அவர்கள் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
நடிகை விஜயசாந்தி சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள அவர் ஒன்றும் புரட்சிப்புயல் அல்ல, அவர் ஒரு சாதாரண நடிகை என்றும், அவர் என்ன பெரிய கொம்பா என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கேள்வி எழுப்பியுள்ளார். அரியலூர் பள்ளி மாணவி விவகாரத்தில் நடிகை விஜயசாந்தி இடம்பெற்ற குழு விசாரணை நடத்தியுள்ள நிலையில் திலகவதி ஐபிஎஸ் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் கட்டாய மதமாற்றத்திற்கு வலியுறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பாஜக குற்றம் சாட்டியது. இதுதொடர்பான வீடியோவையும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மாணவிக்கு நீதி வேண்டும் என்றும் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் மாணவி பேசிய வீடியோ என அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி பேசிய வீடியோவில் எந்த இடத்திலும் தான் மதமாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டதாக கூறவில்லை. பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகம் தன்னை இந்து மத அடையாளங்களையோ, செந்தூர் பொட்டு வைக்கக்கூடாது என்றோ ஒருபோதும் தடுத்ததில்லை என கூறியிருந்தார். மொத்தத்தில் மாணவி மதமாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப் படவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாணவியின் தற்கொலையை வைத்து தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட பாஜக முயற்சி செய்கிறது, அதனால்தான் நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி வருகிறது என குற்றம் சாட்டினர். மதமாற்றம் செய்யப்பட்டதாக தவறாக பிரச்சாரம் செய்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வைத்தனர். இந்நிலையில் இந்தப் பிரச்சினையில் என்ன நடந்தது என்பதை ஆராய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, நடிகை விஜயசாந்தி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார். அந்த குழு உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியது. பின்னர் விசாரணை குறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை விஜயலட்சுமி, உயிரிழந்த மாணவியின் பெற்றோருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியதாகவும், மொத்தத்தில் மாணவிக்கு கொடுமை நடந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும் தெரிவித்த அவர், மாணவியை மதமாற்றம் செய்ய முயற்சி நடந்திருக்கிறது. பாஜகவினர் இந்த விஷயத்தை கையில் எடுத்ததால்தான் இது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் முதலமைச்சர் இதில் ஏன் மவுனம் காக்கிறார். யாரை காப்பாற்ற அவர் முயற்சி செய்கிறார். மொத்தத்தில் இந்த சம்பவத்தை திசைதிருப்ப திமுக முயற்சிக்கிறது என சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவரின் இந்த கருத்தை பலரும் பல வழிகளில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி மாணவியின் விஷயத்தை வைத்து பாஜக மக்களைப் பிளவு படுத்தி முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜேபி நட்ட அமைத்த குழுவையும் நடிகை, பாஜக முன்னாள் எம்பியுமான விஜயசாந்தியை திலகவதி கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டி விவரம் பின்வருமாறு:- மாணவி விவகாரத்தில் பாஜக அரசியல் செய்து வருகிறது.
நம் நாட்டிற்கே உரிய சகிப்புத்தன்மையுடன் மைக்கேல் பட்டி மக்கள் நடந்து கொண்டுள்ளனர். இந்த சகிப்புத்தன்மையுடன் அவர்கள் இருந்ததால் தான் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி விசாரணை.. விசாரணை எனக்கூறி ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள், இனிமேல் விசாரணை என்ற பெயரில் யாரும் ஊருக்கு வரக்கூடாது என கோரி அவர்கள் தடை உத்தரவு பெற்றுள்ளனர். இந்த பள்ளிக்கூடம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது, இந்த பள்ளிக்கூடம் மதமாற்றத்தை தனது கொள்கையாக வைத்து செயல்பட்டிருந்தால் ஆண்டுக்கு ஆயிரம் பேர் என மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருப்பார்கள் ஆனால் இந்துக்களாகிய நாங்கள் இங்கே இருக்கிறோம் என மக்கள் பேசுகின்றனர். குறிப்பாக அந்த பள்ளியில் அதிகம் படிப்பது இந்து மாணவர்கள்தான். ஆனால் இந்த விஷயத்தில் விஜயசாந்தி போன்றவர்கள் நேருக்கு மாறாக கருத்து கூறியுள்ளனர். விஜயசாந்தி ஒன்றும் கொம்பு அல்ல, அவர் ஒரு 10 படங்களில் நடித்திருக்கிறார். அதில் இரண்டு படங்கள் ஓடியிருக்கிறது.
ஒரு நடிகை என்று சொன்னால் பலரும் கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள் என்பதற்காக விஜயசாந்தி போன்றவர்களை குழுவில் அனுப்பி இருக்கிறார்கள். அந்தக் குழுவே ஒரு கட்சியால் நியமிக்கப்பட்ட குழுதான், அதில் இருக்கிற நபர்களை தேர்வு செய்வதிலேயே அரசியல் இருக்கிறது. ஒரு கட்சியைச் சார்ந்தவர்களாக அவர்கள் வருகிறார்கள். அந்த கட்சியின் குரல் எதுவோ அந்த குரலாகத்தான் அவர்கள் ஓங்கி ஒலிப்பார்கள். அந்த கட்சியின் குரலுக்கு எதிராக இவர்கள் குரலெழுப்பியிருந்தால் விஜயசாந்தி சினிமாவில் மட்டும் கதாநாயகி அல்ல, பூ ஒன்று புயலானது என்று நாம் கூறலாம். ஆனால் அப்படி எல்லாம் இதில் கூறுவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த விவகாரத்தை தமிழக அரசு திறம்பட கையாண்டி இருக்கிறது என்றுதான் சொல்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.